டெல்டா உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்டா உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் டெல்டா உள்​ளிட்ட 21 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்​யக்​கூடும். இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு ஆந்​திரக் கடலோரப் பகு​தி​கள் மற்​றும் அதனை ஒட்​டி​யுள்ள மேற்​கு-மத்​திய வங்​கக் கடல் பகு​தி​களில் சுமார் 0.9 கிமீ உயரத்​தில் வளிமண்டல மேலடுக்​குச் சுழற்சி நில​வு​கிறது.

இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (செப்​.21) நீல​கிரி, கோவை, தரு​மபுரி, கிருஷ்ணகிரி, திண்​டுக்​கல், புதுக்​கோட்​டை, திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, பெரம்​பலூர், அரியலூர், கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, சிவகங்​கை, தஞ்​சாவூர், மதுரை, கடலூர், திருப்​பத்​தூர், வேலூர் மற்​றும் திருச்சி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.

இதர தமிழகத்​தில் ஒருசில இடங்​ளில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். 22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களில் மித​மான மழை​யும், இதர தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் லேசான மழை​யும் பெய்​யக்​கூடும்.

23, 24 தேதி​களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை​யும், திரு​வள்​ளூர், சென்​னை, ராணிப் பேட்​டை, காஞ்​சிபுரம் மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும், இதர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசான மழை​யும் பெய்​யக்​கூடும். தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக கிருஷ்ணகிரி மாவட்​டம் பெட்​ட​முகிலா​ளத்​தில் 15 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது.இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

புதிய காற்​றழுத்​தம்: வடக்கு அந்​த​மான் கடல் மற்​றும் அதனை ஒட்​டிய பகு​தி​களில் ஒரு குறைந்த காற்​றழுத்​தத் தாழ்​வுப் பகுதி உரு​வானது. இது வடமேற்கு திசை​யில் கிழக்​கு-மத்​திய வங்​கக்​கடல் பகு​தி​கள் மற்​றும் அதனை ஒட்​டிய வடக்கு அந்​த​மான் கடல் பகு​தி​களில் நில​வு​கிறது. இது மேலும் வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, இன்று கிழக்​கு-மத்​திய வங்​கக்​கடல் பகு​தி​களில் காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டல​மாக​வும், செப்​.22-ம் தேதி ஆழ்ந்த காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டல​மாக​வும் படிப்​படி​யாக வலு​வடையக்​கூடும்​ என வானிலை ஆய்​வு மையம்​ தெரி​வித்​துள்​ளது.

டெல்டா உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கம்யூனிஸ்ட்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் அமைச்சரவையே இருக்காது: இரா.முத்தரசன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in