

கும்பகோணம்: திருநெல்வேலியில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘‘சில கட்சி அலுவலகங்களுக்கு சோபா சென்றது உண்மை. எங்கள் கட்சி தலைமை அலுவலகம் அருகில் உள்ள ஒரு கட்சி அலுவலகத்துக்கு(ஐயுஎம்எல்) சோபா சென்றதை எங்கள் கட்சித் தலைமை நிர்வாகியே பார்த்துள்ளார்.’’ என்று கூறியிருந்தார்.
அதன்பின், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஷாஜகானிடம், ஜவாஹிருல்லா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘மோசடி வழக்கில் தண்டனை பெற்றவர் ஜவாஹிருல்லா’’ எனக் கூறியிருந்தார்.
இதைக்கண்டித்து, கும்பகோணம் அருகே ஆடுதுறையில் உள்ள அமைச்சர் ஷாஜகான் வீட்டை ஜவாஹிருல்லா ஆதரவாளர்கள் முற்றுகையிட போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அமைச்சர் ஷாஜகான் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.