வானிலை முன்னறிவிப்பு: சென்னை, புறநகருக்கு வெப்ப அலை எச்சரிக்கை

கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் மே 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும், சென்னையில் நாளை (மே 22) வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (மே 22) ஓரிரு இடங்களிலும், 23, 24 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 25 முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை (மே 22) சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும். 23-ம் தேதி திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களிலும், 24-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும். 25-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

26-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும், 27-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

உள் தமிழக பகுதிகளில் நாளை முதல் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கும். கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (மே 22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 24-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 5 செமீ, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, நாகுடி, கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
“தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in