விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜாமீன் மனு: ஆகஸ்ட் 3-ல் ஐகோர்ட் விசாரணை

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜாமீன் மனு: ஆகஸ்ட் 3-ல் ஐகோர்ட் விசாரணை
Updated on
1 min read

சென்னை: முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்ட மாா்க்கண்டேயன் நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தமக்கு ஜாமீன் கோரி, மார்க்கண்டேயன் தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மார்க்கண்டேயன் தரப்பில் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மார்க்கண்டேயன் மனு திங்கட்கிழமை முதல் வழக்காக விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பின்னணி என்ன? - கோவில்​பட்​டி​யில் கடந்த 18-ம் தேதி நடை​பெற்ற திமுக பொதுக்​கூட்​டத்​தில் முதல்​வர் விஜய் குறித்து அவதூறாக​வும், மிரட்​டும் வகை​யிலும் பேசி​ய​தாக, விளாத்​தி​குளம் தொகுதி திமுக எம்​எல்ஏ ஜி.வி.மார்க்கண்​டேயன் கடந்த 20-ம் தேதி கைது செய்​யப்​பட்​டு, பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

அவரது ஜாமீன் மனுவை தூத்​துக்​குடி முதலா​வது குற்றவியல் நீதித்​துறை நடு​வர் மன்​றம் கடந்த 22-ம் தேதி தள்​ளு​படி செய்​தது. இதையடுத்​து, சென்னை உயர் நீதிமன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்ட ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர் நீதி​மன்​றம் ஒத்​தி​வைத்​துள்​ளது.

இதே​போல், தூத்​துக்​குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தி​லும் மார்க்​கண்​டேயன் எம்​எல்​ஏவுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி சுபாதே​வி, ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்து உத்தர​விட்​டது நினைவுகூரத்தக்கது.

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜாமீன் மனு: ஆகஸ்ட் 3-ல் ஐகோர்ட் விசாரணை
“தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” - டிகே.சிவகுமார் வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in