“நீட் தேர்வு முறை வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு” - அமைச்சர் அருண்ராஜ் உறுதி

அமைச்சர் அருண்ராஜ்

அமைச்சர் அருண்ராஜ்

Updated on
1 min read

சென்னை:“நீட் தேர்வு முறை கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில உரிமைகளுக்கு எதிரானது. நீட் வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு. இது தொடர்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்” என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மருந்து விற்பனையாளர்கள் நாளை (மே 20) கடையடைப்பு அறிவித்த நிலையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 50,000 மருந்தகங்கள் உள்ள நிலையில் 5,000 கடைகள் நாளை (மே 20) இயங்கும். நாளை கடைகள் மூடப்பட்டாலும் உயிர் காக்கும் மருந்துக்கு தட்டுப்பாடு இருக்காது.

மருந்துக் கடைகாரர்களின் கோரிக்கை ஒன்றிய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.

இதைத் தவிர தேவைப்படும் மருந்துகளும் வாங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய மெடிக்கல் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. தமிழ்நாட்டில் அவசர கால மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. மருந்து விற்பனையாளர்கள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். நாளை முதல் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய இருக்கிறேன்.

நீட் தேர்வு முறை என்பது கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில உரிமைகளுக்கு எதிரானது. நீட் வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு. இது தொடர்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். போதைப் பொருளை தடுக்க தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் அருண்ராஜ் </p></div>
“இடம் அல்ல... சேவையே முக்கியம்” - ஜோதிட அலுவலக சர்ச்சைக்கு தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in