கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை: ஐகோர்ட் தீர்ப்பு

கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை: ஐகோர்ட் தீர்ப்பு
Updated on
1 min read

சென்னை: 15 ஆண்​டு​களுக்கு முன்​பாக நடந்த திரு​வான்​மியூர் கொலை வழக்​கில் விடு​தலை செய்​யப்​பட்ட 2 பெண்​கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்​டனை வழங்கி சென்னை உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

திரு​வான்​மியூரைச் சேர்ந்த ஏழு​மலை என்​பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூனில் முன்​விரோதம் காரண​மாக ஒரு கும்​பலால் வெட்​டிக்​கொலை செய்​யப்​பட்​டார். இது தொடர்​பாக, 16 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்த சென்னை 7-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம், போதிய ஆதா​ரங்​கள் இல்லை எனக்​கூறி, வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட அனை​வரை​யும் விடு​தலை செய்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்​பளித்​தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து காவல் துறை தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மேல்​முறை​யீட்டு மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் பி. வேல்​முரு​கன், எம். ஜோதி​ராமன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது.

அப்​போது அரசு தரப்​பில் கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, கொலையை நேரில் பார்த்த ஏழு​மலை​யின் மனைவி மற்​றும் குழந்​தைகளின் வாக்​குமூலங்​களை அமர்வு நீதி​மன்​றம் கருத்​தில் கொள்​ள​வில்லை என்​றும், சிறிய முரண்​பாடு​களை காரணம் காட்டி வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட அனை​வரை​யும் ஒட்​டுமொத்​த​மாக விடு​தலை செய்​துள்​ளது எனவும் வாதிட்​டார்.

இந்​நிலை​யில், இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட 7 பேர் இறந்து விட்ட நிலை​யில், எஞ்​சிய 9 பேர் மீதான வழக்கை விசா​ரி்த்த உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், திட்​ட​மிட்டு நடத்​தப்​பட்ட இந்த கொலை சம்​பவத்​தில் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் மீதான கொலைக்​குற்​றம் சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​கப்​பட​வில்லை எனக் கூறி, அனை​வரை​யும் விடு​தலை செய்​தது ஏற்​புடையதல்ல.

எனவே, இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள 9 பேரை​யும் குற்​ற​வாளி​கள் என அறிவிக்​கிறோம் என தெரி​வித்து விசா​ரணை நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை ரத்து செய்​தனர். மேலும், கடந்த வாரம் நீதி​மன்​றத்​தில் நேரில் ஆஜரான ஸ்டீபன்​ராஜ், சந்​துரு ஆகியோ​ருக்கு ஆயுள் தண்​டனை மற்​றும் தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​தனர்.

எஞ்​சிய 7 பேர் மீதான தண்​டனை விவரங்​களை அறி​விப்​ப​தற்​காக அவர்​களை பிப்​.16 அன்று நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்த போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டிருந்​தனர். அதன்​படி, இந்த வழக்கு நேற்று நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட கொலைக்​குற்​றச்​சாட்டு சுமத்​தப்​பட்ட லட்​சுமி, செல்வி என 2 பெண்​கள் உள்பட சரவணன், அப்​புனு, குரு​மூர்த்​தி, ஹரிஹரன், நாக​ராஜன் ஆகிய 7 பேருக்​கும் ஆயுள் தண்​டனை மற்​றும் தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்து நீதிப​தி​கள் தீர்ப்​பளித்​தனர். தண்​டனையை நிறுத்தி வைக்க வேண்​டுமென்ற கோரிக்​கை​யை​யும் நீதிப​தி​கள் ஏற்க மறுத்து சிறை​யில் அடைக்க உத்​தர​விட்​டனர்.

கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை: ஐகோர்ட் தீர்ப்பு
கம்போடியா, மியான்மர் செல்வோருக்கு ‘சைபர் ஸ்லேவரி' ஆபத்து: புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமார் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in