கோயில் செயல்பாடுகளில் அரசியல் செய்வது வருந்தத்தக்கது: உயர் நீதிமன்றம்

அறங்காவலர்கள் பெயர்களை செயல் அலுவலர் நீக்கியதாக அறநிலையத் துறை தகவல்
கோயில் செயல்பாடுகளில் அரசியல் செய்வது வருந்தத்தக்கது: உயர் நீதிமன்றம்
Updated on
2 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் குட​முழுக்கு அழைப்​பிதழில் அறங்​காவலர்​களின் பெயர்​களை நீக்​கியது கோயி​லின் செயல் அலு​வலர்​தான். அவர் சுய​மாக முடி​வெடுத்து அறங்​காவலர்​களின் பெயர்​களை நீக்​கி​யுள்​ளார் என உயர் நீதி​மன்​றத்​தில் இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் நீதிமன்றத்தில் தெரிவிக்​கப்​பட்​டது.

மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் அறங்​காவலர் குழு உறுப்​பினர் சுப்​புலெட்​சுமி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்வில் தாக்​கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் செப். 17-ல் குட​முழுக்கு நடை​பெறுகிறது. இதற்​கான அழைப்​பிதழ்​கள் விநி​யோகம் நடை​பெற்று வரு​கிறது. குட​முழுக்கு விழா அழைப்​பிதழில் கோயில் அறங்​காவலர்​கள் குழு தலை​வர் மற்​றும் உறுப்​பினர்​கள் பெயர்​கள் இடம்​பெற​வில்​லை. இதற்கு முன்பு நடை​பெற்ற குட​முழுக்கு மற்​றும் கோயில் விழாக்​களின் அழைப்​பிதழ்​களில் அறங்​காவலர்​களின் பெயர்​கள் அச்​சிடப்​பட்​டுள்​ளன. இந்த அழைப்​பிதழில் அரசி​யல் காரணங்​களுக்​காக அறங்​காவலர்​களின் பெயர்​கள் அச்​சி​டா​மல் விடப்​பட்​டுள்​ளது.

எனவே, மீனாட்சி அம்​மன் கோயில் குட​முழுக்கு விழா​வில் அறங்​காவலர்​கள் குழு உறுப்​பினர்​கள் அதி​கார​வரம்​புக்கு உட்​பட்ட செயல்​பாடு​களை மேற்​கொள்ள அனு​ம​திக்​க​வும், அறங்​காவலர்​களின் சட்​டப்​பூர்வ கடமை​கள், பணி​களில் கோயில் அதி​காரி​கள் தலை​யிட​வோ, இடையூறு செய்​ய​வோ, தடுக்​கவோ, கட்​டுப்​பாடு​கள் விதிக்​கவோ கூடாது என்​றும் அறங்​காவலர்​களின் செயல்​பாட்​டுக்கு அனைத்து ஒத்​துழைப்பு வழங்​க​வும் இந்து சமய அறநிலை​யத் துறைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அறங்காவலர் குழு தரப்பில் அரசியல் காணங்களுக்காக பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. அறநிலை​யத் துறை செயலர் ஆணை​யர் தரப்​பில், அழைப்​பிதழ் அச்​சிடப்​பட்​ட​தில் இந்து சமய அறநிலை​யத்துறைக்கு பங்கு இல்​லை. கோயில் இணை ஆணை​யர்- செயல் அலு​வலர்​தான் அறங்​காவலர்​களின் பெயர்​களை அழைப்​பிதழில் இருந்து நீக்​கி​யுள்​ளார். அவர் சுய​மாக முடி​வெடுத்​துள்​ளார் எனத் தெரிவிக்​கப்​பட்​டது. அதற்கு நீதிப​தி, குட​முழுக்கு விழா அழைப்​பிதழில் அறங்​காவலர் குழு​வின் பெயர் விடு​பட்​டது தவறு என்​றார்.

அரசின் கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் வாதிடு​கை​யில், 3,000 அழைப்​பிதழ்​கள் அச்​சிடப்​பட்டு விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்​ளன. அறங்​காவலர்​களின் பெயர்​களை அழைப்​பிதழில் சேர்க்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டாலும் அதை செயல்​படுத்தி மீண்​டும் அழைப்​பிதழ் விநி​யோகம் செய்ய முடி​யாத சூழல் உள்​ளது எனக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி, குட​முழுக்கு அழைப்​பிதழில் கோயில் அறங்​காவலர் குழு​வினரின் பெயர்​களை அச்​சி​டா​மல் விட்​டது தவறு. குட​முழுக்கு முடிந்த பிறகு கோயி​லில் வைக்​கப்​படும் கல்​வெட்​டில் அறங்​காவலர்​கள் குழு உறுப்​பினர்​களின் பெயர்​கள் கண்​டிப்​பாக இடம்​பெற வேண்​டும். கோயில் என்​பது மக்​கள் அமை​தியை தேடி வரக்​கூடிய இடம்.

இந்த இடத்​தில் அரசி​யல் செய்​வது மிக​வும் வருந்​தத்​தக்க செயல். கோயி​லில் அரசி​யல் செய்​வது ஏற்​கத்​தக்க செயலும் அல்ல. வருங்​காலங்​களில் மதவழி​பாட்டு தலங்​களில் எவ்​வித​மான அரசி​யல் தலை​யீடும் இல்​லாமல் விதிப்​படி நடை​பெறு​வதை அரசு உறு​தி​செய்ய வேண்​டும். மனு முடிக்​கப்​படு​கிறது என உத்​தரவிட்​டார்.

கோயில் செயல்பாடுகளில் அரசியல் செய்வது வருந்தத்தக்கது: உயர் நீதிமன்றம்
10 புதிய அதிநவீன ஆவின் பாலகங்கள்: பேரவையில் அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in