உள்ளாட்சி பிரதிநிதிகளின் சொத்து விவரத்தை இணையத்தில் வெளியிட கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

உள்ளாட்சி பிரதிநிதிகளின் சொத்து விவரத்தை இணையத்தில் வெளியிட கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
Updated on: 
1 min read

சென்னை: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள பிரதிநிதிகளின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தணிக்கை செய்து நகராட்சி நிர்வாகத் துறை இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்காக கட்டாயமாகப் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில செயலாரான திருநின்றவூரை சேர்ந்த கே.பாஸ்கர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்குக்கான மனுவில், ‘1998-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழக நகராட்சிகள் சட்டத்தின் 34-வது பிரிவின்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தலைவர் முதல் உறுப்பினர் வரையிலான அனைத்து பிரதிநிதிகளின் சொத்து விவரங்களை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 90 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த சட்டப்பூர்வமான காலக்கெடு முடிவடைந்த பிறகும், பலர் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கவில்லை. அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இந்த விவரங்கள் கிடைக்கவில்லை என்பதிலிருந்து, உள்ளாட்சி அமைப்புகளில் பொதுவாக வெளிப்படைத்தன்மை குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் சொத்து விவரங்களை சரிபார்த்து, அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சி நிர்வாக ஆணையரிடம் செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தேன். தமிழக மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் சொத்து வெளிப்படுத்தல் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை செப்டம்பர் 23ஆம் தேதி வெளியிட்டது. ஆனால் அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, உடனடியாக குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள பிரதிநிதிகளின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தணிக்கை செய்து நகராட்சி நிர்வாகத் துறை இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்காக கட்டாயமாகப் பதிவேற்ற செய்ய உத்தரவிட வேண்டும்.

சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதவர்களை தகுதியிழப்பு செய்ய வேண்டும்’ என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் சொத்து விவரத்தை இணையத்தில் வெளியிட கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
‘அப்பா குட்டி’க்காக விஜய் ஆண்டனியின் ரயில் பயணம்

X