குற்ற வழக்கில் விடுதலையான ஊழியரின் சஸ்பெண்ட் காலத்தை பணி காலமாக கருத ஐகோர்ட் உத்தரவு

குற்ற வழக்கில் விடுதலையான ஊழியரின் சஸ்பெண்ட் காலத்தை பணி காலமாக கருத ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: குற்ற வழக்​கில் விடு​தலை​யான அரசு ஊழியரின் பணி​யிடை நீக்க காலத்தை பணிக் கால​மாக கருதி ஊதி​யம் மற்​றும் பணப்​பலன் வழங்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஸ்ரீவில்​லிபுத்​தூரைச் சேர்ந்த பலராமன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: மின்​வாரி​யத்​தில் உதவி செயற்பொறி​யாள​ராக பணிபுரிந்​தேன். என் மீது லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

இதனால் 2010 அக்​.20-ல் பணி​யிடை நீக்​கம் செய்​தனர். இந்​நிலை​யில் குற்​றவழக்​கில் என்னை நீதி​மன்​றம் 2022 ஜூன் 30-ல் விடு​தலை செய்​தது.

இருப்​பினும் என் பணி​யிடை நீக்க காலம் ஈட்​டிய விடுப்​பாக​வும், ஊதி​யமில்லா விடுப்​பாக​வும் அறிவிக்​கப்​பட்​டது. இதை ரத்து செய்து ஊதி​யம் மற்​றும் பணப்​பலன்​களை வழங்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கோரியிருந்தார்.

மனுவை நீதிபதி மும்​மினேனி சுதீர் குமார் விசா​ரித்​து பிறப்பித்த உத்தரவு: மனு​தா​ரர் குற்ற வழக்​கில் இருந்து முழு​மை​யாக விடுவிக்​கப்​பட்​ட​தால் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்ட நாள் முதல் ஓய்​வு​பெற்ற நாள் வரையி​லான பணி​யிடை நீக்க காலத்தை பணிக்​கால​மாக கருதி முழுச்​சம்பளம், பணப்​பலன்​களை பிழைப்பூதியத்தை கழித்து 2 மாதத்தில் வழங்க வேண்​டும்.

குற்ற வழக்கில் விடுதலையான ஊழியரின் சஸ்பெண்ட் காலத்தை பணி காலமாக கருத ஐகோர்ட் உத்தரவு
தமிழக மீனவர்கள் 2 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in