பிப்.2-ல் அரசு மருத்துவர்கள் முன்பு ஆஜராக வேண்டும்: சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு

பிப்.2-ல் அரசு மருத்துவர்கள் முன்பு ஆஜராக வேண்டும்: சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: நிலு​வை​யில் உள்ள வழக்​கு​கள் தொடர்​பாக​வும், வழக்​கின் விசா​ரணை அதி​காரி​கள் தொடர்​பாக​வும் எந்த வீடியோக்​களை​யும் வெளி​யிடக்​கூ​டாது என்​றும், பிப்​.2-ம் தேதி அரசு மருத்துவர்கள் முன்​பாக மருத்​துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்​டுமென்​றும் சவுக்கு சங்​கருக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யான பிரபல யூடியூபர் சவுக்கு சங்​கரை ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீ​ஸார் இரு மோசடி வழக்​கு​களின்​கீழ் கடந்த டிச.13-ம் தேதி கைது செய்​தனர்.

சவுக்கு சங்​கருக்கு மருத்​துவ ரீதி​யாக உடல்நல பிரச்​சினை​கள் இருப்​ப​தால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்​டுமென கோரி அவரது தாயார் கமலா உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். அந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், சவுக்கு சங்​கருக்கு மார்ச் 25 வரை இடைக்​கால ஜாமீன் வழங்​கி​யுள்​ளது.

இந்​நிலை​யில், ஜாமீன் நிபந்​தனை​களை மீறி வழக்கு தொடர்​பாக​வும், வழக்​கின் விசா​ரணை அதி​காரி​களை மிரட்​டும் வகை​யிலும் தொடர்ந்து வீடியோக்​களை வெளி​யிட்டு வரு​வ​தால் சவுக்கு சங்​கருக்கு வழங்​கப்​பட்​டுள்ள இடைக்​கால ஜாமீனை ரத்து செய்​யக் கோரி சைதாப்​பேட்டை காவல் ஆய்​வாளர் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது ‘மருத்​துவ காரணங்​களைக் கூறி ஜாமீன் பெற்​றுள்ள சவுக்கு சங்​கர், ஜாமீன் நிபந்​தனை​களை மீறி தற்​போது தொடர்ந்து மிரட்​டல் வீடியோக்​களை வெளி​யிட்டு வரு​கிறார்’ என அரசு தரப்​பில் குற்​றம் சாட்​டப்​பட்​டது.

அதையடுத்து, நீதிப​தி​கள் இந்த வழக்​கில் நேற்று பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: நிலு​வை​யில் உள்ள வழக்​கு​கள் தொடர்​பாகவோ அல்​லது வழக்​கின் விசா​ரணை அதி​காரி​கள் தொடர்​பாகவோ கருத்​துகளை தெரி​வித்து எந்த வீடியோக்​களை​யும் சவுக்கு சங்​கர் வெளி​யிடக்​கூ​டாது. குறிப்​பாக, தவறான தகவல்​களை பொது​வெளி​யில் பரப்​பக்​கூ​டாது.

வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட மற்ற நபர்​களு​டன் தொடர்பு கொள்​ளக்​கூ​டாது. அவர் அமை​தி​யாக இருந்து மருத்​துவ சிகிச்சை மட்​டும் மேற்​கொள்ள வேண்​டும். அவரது உடல்​நிலை குறித்து மருத்​துவ பரிசோதனை செய்ய ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் மருத்​துவ நிபுணர்​கள் அடங்​கிய குழுவை டீன் அமைக்க வேண்​டும். அந்​தக் குழு​வின் முன்​பாக சவுக்கு சங்​கர் வரும் பிப்​.2-ம் தேதி காலை 8 மணிக்கு ஆஜராக வேண்​டும்.

அவரது உடல்​நிலையை பரிசோ​தித்து மருத்​து​வ​மனை டீன் பிப்​.3-ம் தேதி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். அதன்​பிறகு அவரது ஜாமீனை ரத்து செய்​வ​தா, வேண்​டாமா என்​பது குறித்து முடிவு செய்​யப்​படும். இவ்​வாறு உத்​தர​விட்ட நீதிப​தி​கள், வழக்கு விசா​ரணையை பிப்​.3-ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்​ளனர்.

பிப்.2-ல் அரசு மருத்துவர்கள் முன்பு ஆஜராக வேண்டும்: சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு
குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினாவில் போக்குவரத்து மாற்றம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க தடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in