அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கு: மு.க.ஸ்டாலின் தரப்பு பதிலளிக்க செப். 21 வரை ஐகோர்ட் அவகாசம்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கு: மு.க.ஸ்டாலின் தரப்பு பதிலளிக்க செப். 21 வரை ஐகோர்ட் அவகாசம்
Updated on
1 min read

சென்னை: ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தரப்பு பதிலளிக்க செப்.21-ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் எனக்கூறி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி, ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் என்ற உண்மை அம்பலமாகியுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால், அமலாக்கத் துறை குறிப்பட்டிருந்த ஜான் பிரிட்டோ தனது உறவினர் இல்லை எனக்கூறி, ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், மு.க.ஸ்டாலின் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிவுகளை நீக்க முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவுக்கு பதிலளிக்க மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் இன்று மீண்டும் (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன், பதில் மனு தாக்கல் செய்ய செப்.21-ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “அவகாசம் வழங்கி, விசாரணையை செப்.21-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கு: மு.க.ஸ்டாலின் தரப்பு பதிலளிக்க செப். 21 வரை ஐகோர்ட் அவகாசம்
அண்ணா பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழ் வணக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in