கடலில் மூழ்குபவர்களை உயிருடன் மீட்க நிலையான செயல்பாட்டு முறை உருவாக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கடலில் மூழ்குபவர்களை உயிருடன் மீட்க நிலையான செயல்பாட்டு முறை உருவாக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: மெரினாவில் கடந்த ஜூலை 5-ம் தேதி குளிக்​கச்​சென்ற மாதவரத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (17) என்ற இளைஞர் கடல் அலை​யில் சிக்​கிய நிலை​யில், அவரை மீட்டு ஒப்​படைக்​கக் கோரி அவரது தந்தை கே.கோபால் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்ந்​தார்.

இந்த மனுவை கடந்த முறை விசா​ரித்த நீதிப​தி​கள் ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா, பி. கார்த்​தி​கேயன் அமர்வு, “கடல் அலை​யில் சிக்​குபவர்​களை உயிருடன் மீட்​கும் வகை​யில் கடற்​படை ஹெலிகாப்​டர்​களை ஏன் பயன்​படுத்​தக் கூடாது?” என்று கேள்வி எழுப்​பி​யிருந்​தனர்.

இதில் கடலோரக் காவல் படை​யின் கடல்​சார் மீட்பு ஒருங்​கிணைப்பு மையத்தை தாமாக முன்​வந்து எதிர்​மனுதா​ரராக சேர்த்​தனர். இந்​நிலை​யில், இந்த வழக்கு இதே அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனுதா​ரரின் மகன் கடலில் மூழ்​கியது குறித்து 7 மணி நேரம் கழித்தே போலீ​ஸார் தங்​களுக்கு தகவல் தெரி​வித்​த​தாக தேசிய கடல்​சார் தேடல் மற்​றும் மீட்பு ஒருங்​கிணைப்பு ஆணைய மையம் சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் தெரி​விக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள் கூறிய​தாவது: மீட்புப் பணி விஷயத்​தில் மத்​திய, மாநில மீட்பு அமைப்​பு​கள் இடையே சரியான ஒருங்​கிணைப்பு இல்லை. ‘முரசு’ புயல் காரண​மாக காசிமேடு மீனவர்​கள் 9 பேர் கடலில் மூழ்கி உயி​ரிழந்த சம்​பவ​மும் நடந்​தது.

ஒவ்​வொரு நிமிடமும் முக்​கிய​மானது என்​பதை உணர்ந்து, கடலில் மூழ்​குபவர்​களை உடனடி​யாக உயிருடன் மீட்​கும் வகை​யில், அவசர காலங்​களில் தேடல், மீட்பு பணிகளை திறமையாக, விரைவாக மேற்​கொள்​ளும் வகை​யில் நிலை​யான வழிகாட்டு செயல்​பாட்டு முறையை தமிழக அரசு உரு​வாக்கி, அது​தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்ட நீதிப​தி​கள் 2 வாரங்​களுக்கு தள்​ளிவைத்​தனர்.

கடலில் மூழ்குபவர்களை உயிருடன் மீட்க நிலையான செயல்பாட்டு முறை உருவாக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
காவிரி விவசாயிகள் கருத்துகளை கேட்க திமுக சார்பில் குழு அமைப்பு

X