நெல்லை கவின் கொலை வழக்கு: சுர்ஜித் பெற்றோர் மீதான வழக்கு ரத்து

கவின், சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை சரவணன் (இடமிருந்து வலமாக)

கவின், சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை சரவணன் (இடமிருந்து வலமாக)

Updated on: 
1 min read

மதுரை: நெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர்கள் தம்பதி மீதான வழக்கை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது.

துாத்துக்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின், நெல்லையின் வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி (இருவரும் சார்பு ஆய்வாளர்கள்) மாற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே நாங்கள் இல்லை. இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக மட்டுமே எங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என மனுக்களில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, சுர்ஜித் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரி மீதான வழக்கை ரத்து செய்தும், உறவினர் ஜெயபால் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

<div class="paragraphs"><p>கவின், சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை சரவணன் (இடமிருந்து வலமாக)</p></div>
“தமிழகத்தில் அதிகரிக்கும் ஆண்கள் இறப்பு விகிதப் பின்னணியில் மதுப்பழக்கம்” - ஆய்வு செய்ய அன்புமணி கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in