தாமிரபரணி ஆற்​றில் ஆடைகளை வீச தடை: சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பாபநாசத்தில் தாமிரபணி ஆற்றில் இருந்து, சமூக ஆர்வலர்களால் கடந்த மே மாதம் டன் கணக்கில் அகற்றப்பட்ட துணிகள்.

பாபநாசத்தில் தாமிரபணி ஆற்றில் இருந்து, சமூக ஆர்வலர்களால் கடந்த மே மாதம் டன் கணக்கில் அகற்றப்பட்ட துணிகள்.

Updated on
2 min read

மதுரை: தாமிரபரணி ஆற்​றில், ஆடைகளை வீச உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தடை விதித்​துள்​ளது.

நெல்லை மாவட்​டம் விக்​ரமசிங்​கபுரத்​தில் தாமிரபரணி ஆற்​றங்​கரை​யில் ஆனந்த விலாஸ் மண்​டபம் உள்​ளது. அதைக் கையகப்​படுத்த தடை கோரி, பாப​நாசம் சிவனு பாண்​டியன் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

அதை விசா​ரித்து நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், பி.பு​கழேந்தி ஆகியோர் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: தாமிரபரணி ஆற்​றின் படித் துறை​களில் முன்​னோருக்​குச் சடங்​கு செய்​யும் ​போது, தின​மும் ஒரு டன்​னுக்கு குறை​யாத அளவு பயன்​படுத்​தப்​பட்ட, பயன்​படுத்​தப்​ப​டாத ஆடைகள், துண்​டு​கள், காலணி​கள் மற்​றும் இறந்​தவர்​களு​டன் தொடர்​புடைய பொருட்​கள் ஆற்​றில் வீசப்​படு​கின்​றன.

மதத்​தின் பெய​ரால்​கூட நீர்​நிலையை மாசுபடுத்த யாருக்​கும் உரிமை இல்​லை. தூய பருத்​தி​யால் நெய்​யப்​பட்ட ஆடைகள் இயற்​கை​யில் மட்​கக் கூடிய​வை. ஆனால், பாலியஸ்​டர் துணி​கள் மட்​கு​வ​தில்​லை. இந்த ஆடைகளால் ஆற்​றுப்​படு​கை​யில் பாக்​டீரி​யாக்​கள் உரு​வாகின்​றன.

நூறு ஆண்​டு​கள் வரை வாழும் இந்​தி​யக் கருப்பு ஆமை மற்​றும் இந்​திய ஃப்​ளாப்​ஷெல் ஆமை​களின் வாழ்​விட​மாக​வும் தாமிரபரணி ஆறு உள்​ளது. இந்த வகை ஆமை​கள், ஆற்​றில் வீசப்​பட்ட துணி​களில் சிக்கி இறக்​கின்​றன. ஆற்​றில் வீசப்​படும் சோப்​பு, ஷாம்பு போன்ற ரசாயனங்​களின் பயன்​பாடு மீன்​களுக்கு உயி​ரிழப்பை ஏற்​படுத்​தும்.

நீர் நிலைகளை எந்த வகை​யிலும் மாசுபடுத்​து​வதை ஏற்க முடி​யாது. எனினும் இப்​பிரச்​சினை இந்​துக்​களின் நம்​பிக்​கைகள் மற்​றும் உணர்​வு​களு​டன் தொடர்​புடையது. தாமிரபரணி ஆற்​றங்​கரை​யில் சடங்​கு​கள் மற்​றும் வழி​பாடு​களை முறைப்​படுத்​து​வ​தால் அடிப்​படை உரிமை​கள் மீறப்​ப​டாது. சுற்​றுச்​சூழல் பாதிப்பு இல்​லாமல், மக்​களின் உரிமை​களை மீறாமல் இருக்​கும் நிலை​யில் பக்​தர்​கள் ஆன்​மிகச் செயல்​களை மேற்​கொள்​ளலாம்.

இந்​துக்​களால் தாமிரபரணி ஆறு புனித​மான​தாகக் கருதப்​படு​வதை​யும், அதை வழிபடு​வதை​யும் நாங்​கள் அங்​கீகரிக்​கிறோம். அதனால்​தான், 12 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை தாமிரபரணி புஷ்கரம் நடை​பெறுகிறது.

தாமிரபரணி ஆறு ‘தாமிர தேவி'​யாக உரு​வகப்​படுத்​தப்​படு​கிறது. தாமிரபரணி ஆற்றை ‘ஒரு நபராக’ நாங்​கள் அங்​கீகரிக்​கிறோம். ஆறுகளைத் தெய்​வங்​களாகக் கருதும் நாம்​தான் கழி​வு​களை​யும் உரு​வாக்​கு​கிறோம். ஆறுகளுக்​குத் தீங்கு விளை​விப்​பது முன்​னோர்​கள் காலத்​தில் குறை​வாக இருந்​தது. அது ஆறுகளின் சுய சுத்​தி​கரிப்​புத் திறனுக்கு உட்​பட்​ட​தாகவே இருந்​தது. தற்​போது அவ்​வாறு இல்​லை.

பெரிதும் விமர்​சிக்​கப்​படும் மனுஸ்​மிரு​தி​யில், நீரில் சிறுநீர் அல்​லது மலம் கழிக்​கக் கூடாது. நீரில் துப்​பக் கூடாது, அத்​துடன் ரத்​தம், இறைச்சி அல்​லது விஷம் போன்ற பொருட்​களை போட கூடாது என்று கூறப்​பட்​டுள்​ளது. எனவே, தாமிரபரணி ஆற்​றில் ஆடைகள் மற்​றும் பிற பொருட்​களை வீசத் தடை விதிக்​கப்​படு​கிறது. இறந்​தோருக்​கான சடங்​கு​களைச் செய்​வதன் பெய​ரால் ஆறு மாசுபடு​வதைத் தடுக்க மாவட்ட நிர்​வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும். மாவட்ட ஆட்​சி​யர் தாக்​கல் செய்​துள்ள செயல்​திட்ட அறிக்​கையை அதி​காரி​கள் கடுமை​யாக அமல்​படுத்த வேண்​டும்.

இதுதொடர்​பாக பிரச்​சா​ரங்​கள் மேற்​கொள்ள வேண்​டும். ஆற்றை மாசுபடுத்​து​வது நீதி​மன்ற அவம​திப்​புச் செய​லாகக் கருதப்​படும் என்று மக்​களுக்​குத் தெரிவிக்க வேண்​டும். ஆற்றை மாசுபடுத்​து​வோருக்கு அபராதம் விதிக்க வேண்​டும். இதற்​காக உள்​ளாட்சி அமைப்​பு​களில் தீர்​மானம் நிறைவேற்ற வேண்​டும். விதி​மீறலில் ஈடு​படு​வோர் பிற விளைவு​களை​யும் சந்​திக்க நேரிடும்.

ஆற்றை மாசுப​டா​மல் பாது​காக்​கும் உத்​தரவை அமல்​படுத்​து​வ​தில் மாவட்ட நிர்​வாகம் சமூகப் பணிக் குழு உறுப்​பினர்​களை​யும் ஈடு​படுத்த வேண்​டும். பணிக்​குழு உறுப்​பினர்​களுக்​குக் கவுரவ ஊதி​யம் வழங்​கலாம். ஆற்றை மாசுபடுத்​து​வதைத் தடுக்​கும் பணி​யில் ஈடு​படும் மக்​களுக்கு போலீ​ஸார் உதவ வேண்​டும். தாமிரபரணி ஆற்​றில் சுடப்​ப​டாத மண் பானை​யில் அஸ்​தி​யைக் கரைக்க அனு​மதி வழங்​கப்​படு​கிறது.

இந்த வழக்​கில் மனு​தா​ரர் உரிமை கோரி​யுள்ள மண்​டபம், தாமிரபரணி ஆற்​றுப் பகு​தி​யில் அமைந்​துள்​ளது. கட்​டிடத்தை அறநிலை​யத் துறை கையகப்​படுத்த வேண்​டும். அறநிலை​யத் துறை​யும், தொல்​லியல் துறை​யும் இணைந்து மண்​டபத்தை பழமை மாறாமல்​ புதுப்​பிக்​க வேண்​டும்​. இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ கூறியுள்​ளனர்​.

<div class="paragraphs"><p>பாபநாசத்தில் தாமிரபணி ஆற்றில் இருந்து, சமூக ஆர்வலர்களால் கடந்த மே மாதம் டன் கணக்கில் அகற்றப்பட்ட துணிகள்.</p></div>
“வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் தப்ப முடியாது” - புதிய செல்ஃபி வீடியோவில் பிரதமர் மோடி எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in