ஆபத்தான தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்படும்: பேரவையில் அமைச்சர் முகமது பர்வேஸ் உறுதி

ஆபத்தான தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்படும்: பேரவையில் அமைச்சர் முகமது பர்வேஸ் உறுதி
Updated on
1 min read

சென்னை: ‘ஆபத்​தான தொழிற்​சாலைகளில் பாது​காப்பு குறித்து ஆய்வு செய்​யப்​படும்’ என்று சட்​டப்​பேர​வை​யில் தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் முகமது பர்​வேஸ் தெரி​வித்​தார்.

திருவள்​ளூரில் அம்​மோனியா கசிவு விவ​காரம் தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் 110 விதி​யின்​கீழ் அமைச்​சர் ஜா.​முகமது பர்​வேஸ் பேசி​ய​து: திரு​வள்​ளூர் கன்​னிகைபேர் கிராமத்​தில் தனி​யார் தொழிற்​சாலை​யில் ஐஸ் பிளேக்ஸ் ஜெனரேட்​டர் மெஷினுக்கு செல்​லும் பைப்​லைன் வால்​வில் எதிர்பா​ராத​வித​மாக ஏற்​பட்டவிபத்து காரண​மாக அம்​மோனியா வாயு கசிவு ஏற்​பட்​டுள்​ளது.

இதன்​காரண​மாக அந்த வளாகத்​தில் இருந்த 74 பேர் பாதிக்​கப்​பட்டு அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். அவர்​கள் அனை​வருக்​கும் சிறப்​பான மருத்​துவ சிகிச்சை வழங்க வேண்​டுமென முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

இந்த விபத்​தில் உயி​ரிழந்த 5 பெண்​களின் குடும்​பங்​களுக்​கு, முதல்​வரின் பொது நிவாரண நிதி​யில் இருந்து தலா ரூ.2 லட்​சம் வழங்க முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். இதுத​விர இறந்​தவர்​களின் உடல்​களை சொந்த மாநிலத்​துக்கு அனுப்பி அடக்​கம் செய்​வதற்​கான செலவை தமிழக அரசே மேற்​கொள்​ளும் எனவும், விபத்​தில் உயி​ரிழந்து மற்​றும் பாதிப்​படைந்த தொழிலா​ளர்​களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் நிதியை உடனே வழங்​க​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த விபத்து குறித்து தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தா​ரத்துறை இயக்​குநர், தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாடு வாரிய உறுப்​பினர் செயலர் ஆகியோர் அறிக்​கையை 24 மணி நேரத்​துக்​குள்​ளும், முழு​மை​யான விசா​ரணையை 3 நாட்​களுக்​குள் சமர்ப்​பிக்​கு​மாறு முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். தமிழகத்​தில் மொத்​தம் 54,957 தொழிற்​சாலைகள் உள்​ளன. இவற்​றில் 27 லட்​சத்து 65,313 பேர் பணிபுரி​கின்​றனர். அதில் அபாயகர​மான தொழிற்​சாலைகள் 6,669 உள்​ளன. வரும்​ காலங்​களில் இத்​தகைய விபத்​துகளைத் தவிர்க்​கும் பொருட்​டு, உடனே குழு அமைத்து ஆபத்​தான தொழிற்​சாலைகளில் ஆய்வு செய்​யப்பட உள்​ளது.

மேலும், விபத்து ஏற்​ப​டா​மல் இருக்க தேவை​யான அனைத்து பாது​காப்பு நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

ஆபத்தான தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்படும்: பேரவையில் அமைச்சர் முகமது பர்வேஸ் உறுதி
வாட்ஸ்அப் சிஇஓ-வாக கிரெட் நிறுவனர் குணால் ஷா நியமனம்: மெட்டா அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in