பசுமை வழிச்சாலை டூ மந்தைவெளி: சென்னை மெட்ரோ ரயில் வழித்தட சுரங்கப் பணி நிறைவு

பசுமை வழிச்சாலை டூ மந்தைவெளி: சென்னை மெட்ரோ ரயில் வழித்தட சுரங்கப் பணி நிறைவு
Updated on
1 min read

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித் தடத்தில், பசுமை வழிச்சாலை- மந்தைவெளி நிலையம் வரை 763 மீட்டருக்கு சுரங்கப் பாதை பணியை "நொய்யல்" சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக நிறைவு செய்தது.

சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், மாதவரம் -சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் ஒன்றாகும். இத்தடத்தில் ஒரு பகுதியாக. பசுமை வழிச்சாலை - மந்தைவெளி நிலையம் இடையே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது.

இந்த சுரங்கப் பாதை பணிகளுக்காக, நொய்யல், வைகை என பெயரிடப்பட்ட 2 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன. வைகை சுரங்கம் தோண்டும் இயந்திரம், பசுமை வழிச்சாலை நிலையத்தில் இருந்து (அப்-லைன்) சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கி, கடந்த ஆண்டு அக்.18-ல் பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது.

763 மீட்டர் நீளத்துக்கு..: நொய்யல் இயந்திரம், பசுமைவழிச் சாலை நிலையத்தில் இருந்து (டவுன் லைன்) 763 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் தோண்டும் பணியை நேற்று வெற்றிகரமாக முடித்து, மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ் டோன் எலியேசர் (திட்டம் திட் டமிடல் மற்றும் வடிவமைப்பு), எஸ்.அசோக் குமார் (வழித் தடம் மற்றும் உயர்மட்டகட்டு மானம்), பொது மேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி (சுரங்கப்பாதை கட்டுமானம்). ரவிச்சந்திரன் (சுரங்கப்பாதை கட்டுமானம்), லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் லட்சுமி பிரசாத் மற்றும் உயர் அலுவலர்கள், பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்றது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் 75 கட்டிடங்களுக்கு கீழே சென்றது. இக்கட்டிடங்களுக்கும் சுரங்கப் பாதைக்கும் இடையேயுள்ள மண் அடுக்கு 9 மீட்டரில் இருந்து 12 மீட்டர் வரை இருந்தது.

மந்தைவெளி பகுதியில் ஏற்கனவே பல முக்கியமான அடிப்படை வசதி கட்டமைப்புகள், அதாவது. கழிவுநீர் குழாய்கள், குடிநீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் ஆகியன இருந்தன. இதன் காரணமாக, மிகக் கவனமான திட்டமிடலும், கூடுதல் கட்டுமான காலமும் தேவைப்பட்டது. இப்பணியை முடிக்க 419 நாட்கள் தேவைப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பசுமை வழிச்சாலை டூ மந்தைவெளி: சென்னை மெட்ரோ ரயில் வழித்தட சுரங்கப் பணி நிறைவு
Dear Men: இருண்ட உலகமும், சயானி போன்ற மீட்பர்களும்! - திரை தேவதைகள் 04

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in