கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்: சென்னையில் கிருஷ்ணர் - ராதை வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
| படம்: எஸ்.சத்தியசீலன் |

| படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
2 min read

சென்னை: கிருஷ்ண ஜெயந்தி விழா சென்​னை​யில் நேற்று கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்​டது. பல்​வேறு இடங்​களில் கிருஷ்ணர் - ராதை வேட​மிட்டு குழந்​தைகள் ஊர்​வல​மாகச் சென்​றனர்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்​த​நாளான ‘கிருஷ்ண ஜெயந்​தி’ (கோகுலாஷ்ட​மி), தமிழகம் முழு​வதும் நேற்று கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, சென்​னை​யில் உள்ள முக்​கிய கிருஷ்ணர் ஆலயங்​களில் சிறப்பு பூஜைகள் மற்​றும் அபிஷேகங்​கள் நடை​பெற்​றன.

மயி​லாப்​பூர் நந்​தலாலா கோயி​லில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகங்​களும், பூஜைகளும் நடை​பெற்​றன. கோபாலபுரத்​தில் உள்ள வேணுகோ​பால சுவாமி கோயி​லில் காலை​யி​லிருந்தே ஏராள​மான பக்​தர்​கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்​தனர்.

சென்னை கிழக்கு கடற்​கரை சாலை, அக்​கரை​யில் உள்ள இஸ்​கான் கோயி​லில் மங்கள ஆரத்​தி, ஸ்ரீமத் பாகவத சொற்​பொழி​வு, தரிசன ஆரத்​தி, குருபூஜை மற்​றும் மகா அபிஷேகம் ஆகியவை நடை​பெற்​றன. நாள் முழு​வதும் பக்​தர்​கள் ஜன்​மாஷ்டமி விரதமிருந்து கிருஷ்ணரை வழிபட்​டனர்.

இதே​போல், திரு​வான்​மியூர் வால்​மீகி நகரில் உள்ள ஸ்ரீல பிரபு​பாதரின் இஸ்​கான் ஹரே கிருஷ்ண இயக்​கம் சார்​பிலும் விழா விமரிசை​யாக நடை​பெற்​றது.

சாஸ்​திரி நகர் கிருஷ்ணர் கோயி​லில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, கோ பூஜை மற்​றும் விஷ்ணு சகஸ்​ர​நாம பாராயணம் ஆகியவை நடை​பெற்​றன. இதில் நூற்​றுக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

பொது​மக்​கள் தங்​களது வீடு​களி​லும் கிருஷ்ண ஜெயந்​தியை உற்​சாக​மாகக் கொண்​டாடினர். கிருஷ்ணர் தங்​கள் வீட்​டுக்கு நேரில் வரு​வ​தாக ஐதீகம் என்​ப​தால், வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்​தை​யின் பாதச் சுவடு​களை கோலமிட்டு அழகுபடுத்​தினர்.

கிருஷ்ணருக்​குப் பிடித்​த​மான வெண்​ணெய், அவல், நாவல் பழம் மற்​றும் சீடை, முறுக்​கு, அப்​பம், லட்​டு, தட்டை உள்​ளிட்ட பலகாரங்​களைப் படைத்து வழி​பாடு செய்​தனர்.

பண்​டிகை​யின் சிறப்​பம்​ச​மாக, பல இடங்​களில் பெற்​றோர் தங்​கள் குழந்​தைகளுக்கு கிருஷ்ணர் மற்​றும் ராதை போல வேட​மிட்டு மகிழ்ந்​தனர்.

எழும்​பூர் ஸ்ரீகிருஷ்ண பால​கோகுல நண்​பர்​கள் குழு சார்​பில் நடை​பெற்ற பிரம்​மாண்ட ஊர்​வலத்​தில், ஏராள​மான சிறார்​கள் கிருஷ்ணர் - ராதை வேட​மிட்டு பங்​கேற்​றது பொது​மக்​களை வெகு​வாகக் கவர்ந்​தது.

தலை​வர்​கள் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்​தி​யையொட்​டி, முதல்​வர் மற்​றும் அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது

முதல்​வர் விஜய்: அனை​வரின் இல்​லங்​களும் உள்​ளங்​களும் மகிழ்ச்​சி​யால் நிறை​யும் கிருஷ்ண ஜெயந்தி திரு​நாளில் அனை​வருக்​கும் எனது மனமார்ந்த நல்​வாழ்த்​துகள்.

அநீ​திக்கு எதி​ரான அறம் வெல்​லும், எத்​தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்​டும், தர்​மத்​தின் வழி​யில் மன உறு​தி​யுட​னும் நம்​பிக்​கை​யுட​னும் வாழ்க்​கைப் பயணத்தை முன்​னெடுக்க வேண்​டும் என்​னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்​களைப் பின்​பற்றி உயரிய வாழ்​வியல் நெறிகளு​டன் அன்​பும் அறமும் தழைத்​தோங்​கும் நல்​லுல​கைப் படைத்​திடு​வோம்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்​ததே இந்த உலகத்​தில் தீமை​களை ஒழிப்​ப​தற்​காக என்​பதை நாம் அனை​வரும் நன்கு அறிவோம். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்​தி​யைக் கொண்​டாடும் ஒவ்​வொரு​வரும் அறத்​தைப் போற்​றி, தீமை​களை முறியடிக்க வேண்​டும் என்று உறு​தி​யேற்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதே​போல், ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், வி த லீடர்​ஸ்​ தலை​வர்​ அண்​ணா​மலை உள்​ளிட்​டோரும்​ வாழ்த்​து தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>| படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
396 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: அமைச்சர் ராஜ்மோகன் இன்று வழங்குகிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in