ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் பதில்

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் பதில்
Updated on
1 min read

மதுரை: ஈ​ரானில் தவிக்​கும் தமிழக மீனவர்களை மீட்​கக் கோரிய வழக்​கில் மீனவர்களைப் பத்​திர​மாக மீட்க இந்திய தூதரகம் மூல​மாக நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருகிறது என உயர் நீதி​மன்​றத்​தில் அரசு தெரிவித்துள்ளது.

குமரி மாவட்​டம் கடியப்​பட்​ட​ணத்​தைச் சேர்ந்த பாபின் செசா​ரியோ, சத்ய ரஸ்​மான் ராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: சகோ​தரர்​கள் அஸ்​வின் ரஞ்​சித் குமார், சகாய ஜெனிஷ்​ராஜ் ஆகியோர் ஈரான் மீன்​பிடி நிறு​வனத்​துக்கு கடந்த ஆண்டு செப்​டம்​பரில் பணிக்​குச் சென்​றனர்.

தற்​போது அமெரிக்​கா, இஸ்​ரேல்நாடு​கள் ஈரான் நாட்​டின் மீது போர் தொடுத்​துள்​ள​தால் ஈரானில் எங்​கள் சகோ​தரர்​கள் பாது​காப்​பற்ற சூழலில் தவிக்​கின்​றனர். குண்டு மழை பொழி​வ​தாக​வும், உணவு​கூட கிடைக்​காமல் தவிப்ப​தாக​வும் தெரிவித்தனர்.

குமரி மாவட்​டம் கடியப்​பட்​ட​ணம், குளச்​சல், இணை​யம் மற்​றும் முட்​டம் உட்பட பல்​வேறு பகு​தி​களைச் சேர்ந்த 60 மீனவர்கள் ஈரானில் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

தூத்​துக்​குடி, நெல்​லை, ராம​நாத​புரம், கடலூர் மாவட்​டங்​களைச் சேர்ந்த 600-க்​கும் மேற்​பட்​டோர் ஈரானில் பணிபுரி​கின்​றனர். இவர்​கள் அனை​வரும் அச்​சத்​தில் உள்​ளனர். இவர்​களைப் பாது​காக்க ஈரான் அரசு எந்​த​வித நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

எனவே, ஈரான் நாட்​டில் தவிக்​கும் தமிழக மீனவர்களை பாது​காப்​பாக அழைத்​துவர உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. மனுவை நீதிபதி பரத சக்​கர​வர்த்தி விசா​ரித்​தார்.

அரசுத் தரப்​பில், ஈரானில் உள்ள இந்​தி​யர்​களை மீட்க இந்​திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வரு​கிறது. தூதரகத்தை தொடர்பு கொள்​வதற்​காக தொலைபேசி எண்​ மற்​றும் மின்​னஞ்​சல் முகவரி​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இந்தியர்களை மீட்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதைப் பதிவுசெய்த நீதிபதி, மனு​தா​ரர்​கள் உறவினர் விவரங்​களை தூதரக மின்​னஞ்​சலுக்கு அனுப்பி உரிய நிவாரணம் பெறுமாறு உத்​தர​விட்​டார்.

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் பதில்
தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் மட்டும் 34 லட்சம் டன் நெல் கொள்முதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in