அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை
Updated on: 
1 min read

சென்னை: உயர்​கல்​வித் துறை செயலர் தீரஜ் குமார் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறியிருப்​ப​தாவது: சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது உயர்​கல்​வித் துறை அமைச்​ச​ர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு கலை அறி​வியல் கல்​லூரி​கள், கல்​வி​யியல் கல்​லூரி​களில் ஷிப்ட்-1 மற்​றும் ஷிப்ட்​-2-ல் பணி​புரி​யும் 8,741 கவுரவ விரி​வுரை​யாளர்​களின் மாதாந்​திர தொகுப்​பூ​தி​யத்தை ரூ.30 ஆயிரத்​தில் இரு்ந்து ரூ.35

ஆயிர​மாக நவ.1 முதல் உயர்த்தி வழங்க அரசு ஆணை​யிடு​கிறது. அதே​போல், அரசு பொறி​யியல் கல்​லூரி​களில் அனு​ம​திக்​கப்பட்ட 319 கவுரவ விரி​வுரையாளர்​களின் மாதாந்​திர தொகுப்பூ​தி​யம் ரூ.30 ஆயிரத்​தில் இருந்து ரூ.36 ஆயிரமாக​வும், அரசு பாலிடெக்​னிக் கல்​லூரிகளில் அனு​ம​திக்கப்​பட்ட 566 கவுரவ விரி​வுரை​யாளர்​களின் தொகுப்​பூ​தி​யம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிர​மாக​வும் நவ.1 முதல் உயர்த்தி வழங்க அரசு ஆணை​யிடு​கிறது என்று கூறப்​பட்​டுள்​ளது.

இதற்கிடையே, உயர்​கல்வி அமைச்​சர் விஸ்​வ​நாதன் உறுதி அளித்​த​படி தொகுப்​பூ​திய உயர்வை செப்.1 முதல் நடை​முறைப்​படுத்த வேண்​டும்​ என கவுரவ விரிவுரையாளர்கள்​ கோரிக்​கை ​விடுத்​துள்ளனர்​.

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை
தமிழகத்தில் திமுகவுடன் பாஜக இணக்கமாக செல்கிறதா? - நயினார் நாகேந்திரன் விளக்கம்

X