தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் நவ.9 அரசு விடுமுறை

தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் நவ.9 அரசு விடுமுறை
Updated on: 
1 min read

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை ஒட்டி தீபாவளிக்கு அடுத்த நாள் நவ.09 விடுமுறை என்றும் அதற்குப் பதிலாக நவம்பர் 21-ம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி அரசின் உள்துறை சார்பு செயலர் ஹிரண் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் (புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம்) தீபாவளி பண்டிகைக்கு அடுத்தநாள் நவம்பர் 9-ம் திங்கட்கிழமை அன்று, அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள் (தொழில்முறை கல்லூரிகள் உட்பட) மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அறிவிக்கிறார்.

விடுமுறைக்கு ஈடாக நவம்.21-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாகச் செயல்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் நவ.9 அரசு விடுமுறை
மேட்டூர் அணையில் நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

X