விவசாயிகளுக்கு அரசு சலுகை: பயிர்க்கடன் நிலுவையை செலுத்தினால் வட்டி தள்ளுபடி

விவசாயிகளுக்கு அரசு சலுகை: பயிர்க்கடன் நிலுவையை செலுத்தினால் வட்டி தள்ளுபடி
Updated on: 
1 min read

சென்னை: கூட்டுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் தங்களுக்கான தள்ளுபடித் தொகை நீங்கலாக மீதமுள்ள நிலுவைக் கடனை நவ.30-ம் தேதிக்குள் திருப்பிச் செலுத்தி, புதிய பயிர்க்கடன் பெற்றுக் கொள்ளலாம்.

நடப்பாண்டில் இதுவரை 5 லட்சத்து 70,942 விவசாயிகளுக்கு ரூ.5,190 கோடி அளவுக்கு பயிர்க்கடன் தரப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வசதிக்காக வரும் நவ.28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய விடுமுறை நாட்களிலும் கூட்டுறவுக் கடன் வழங்கும் சங்கங்கள் செயல்படும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிலுவைக் கடனைச் செலுத்தி, புதிய பயிர்க்கடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

விவசாயிகளுக்கு அரசு சலுகை: பயிர்க்கடன் நிலுவையை செலுத்தினால் வட்டி தள்ளுபடி
நெல்லை போக்சோ நீதிமன்ற நீதிபதி பணியிடை நீக்கம்

X