பைக் மீது அரசு பேருந்து மோதி பிஹார் தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப உயிரிழப்பு

பைக் மீது அரசு பேருந்து மோதி பிஹார் தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப உயிரிழப்பு
Updated on
1 min read

திண்​டுக்​கல்: திண்​டுக்​கல் மாவட்​டம் சின்​னாளபட்டி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதி​ய​தில் பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்த கட்​டிடத் தொழிலா​ளர்​கள் 2 பேர் உயி​ரிழந்​தனர்.

பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்த இளைஞர்​களான கிருஷ்ணா (22), தில்​சூல் (21) ஆகியோர் சின்​னாளபட்டி அருகே ஜே.ஊத்​துப்​பட்டி கிராமத்​தில் தங்​கி​யிருந்து கட்​டிட வேலை பார்த்​தனர்.

இரு​வரும் நேற்று காலை ஜே.ஊத்​துப்​பட்​டி​யில் இருந்து சின்​னாளபட்டி நோக்கி பைக்​கில் சென்று கொண்​டிருந்​தனர். மதுரை - திண்​டுக்​கல் தேசிய நெடுஞ்​சாலை மேலக்​கோட்டை ஆஞ்​சநேயர் கோயில் அருகே சென்​ற​போது பைக் மீது அரசுப் பேருந்து மோதி​ய​தில் 2 பேரும் படு​காயமடைந்து அந்த இடத்​திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

இரு​வரது உடல்​களை​யும் மீட்ட போலீ​ஸார், பரிசோதனைக்​காக திண்​டுக்​கல் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இந்த விபத்​துக் குறித்து அம்​பாத்​துறை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரணை நடத்தி வருகின்றனர்.

பைக் மீது அரசு பேருந்து மோதி பிஹார் தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப உயிரிழப்பு
இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்: தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in