பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கைய வெளியிட வேண்டும்: உவகை ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தல்

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கைய வெளியிட வேண்டும்: உவகை ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: உவகை ஆராய்ச்சி நிறு​வனம் சார்​பில்,பரந்​தூரில் விமான நிலை​யம் அமைப்​ப​தற்​காக டிட்கோ கொடுத்​துள்ள முதல்​கட்ட சாத்​தி​யக் கூறுகளுக்​கான அறிக்​கையை பகுப்​பாய்வு செய்​து, விது​பாலா, ராஜதுரை, சந்​திர குப்தா உள்​ளிட்ட அந்​நிறு​வனத்​தின் இயக்​குநர்​கள் அறிக்கை ஒன்றை நேற்று வெளி​யிட்​டனர்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது: காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்தூர் பகு​தி​யில் 5,746 ஏக்​கர் நிலப்​பரப்​பில் புதிய சர்​வ​தேச விமான நிலை​யத்தை அமைக்க தமிழக அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​கான சாத்​தி​யக்​கூறு அறிக்​கையை டிட்​கோ நிறு​வனம் வழங்​கி​யுள்​ளது.

அந்த அறிக்கை எங்​கள் நிறு​வனம் சார்​பில் ஆய்வு செய்​யப்​பட்​டது. அறிக்​கை​யில் பல குளறு​படிகள் உள்​ளன. அதாவது, விமான நிலை​யம் அமைக்க தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள நிலப்​பரப்​பில் சுமார் 26.5 சதவீதம் நீர்​நிலைகள் உள்​ளன. ஆனால், டிட்கோ அறிக்​கை​யில் இயற்​கை​யான ஈர நிலங்​கள் எது​வும் இல்லை என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

2015-ம் ஆண்டு சென்​னை​யில் ஏற்​பட்ட பெரு​வெள்​ளத்​தின்​போது, இந்​தப் பகு​தியி​லிருந்து வெளி​யேறிய உபரி நீர் அடை​யாறு மற்​றும் கூவம் ஆறுகளில் கலந்து பாதிப்பை ஏற்​படுத்​தி​யது. தற்​போது இந்த நீர்​நிலைகள் அழிக்​கப்​பட்​டால், மழைக்​காலங்​களில் வெளி​யேறும் உபரி நீர் எங்கு செல்​லும் என்ற தெளி​வான திட்​டம் அரசிடம் இல்​லை.

சென்னை மற்​றும் அதன் புறநகர் பகு​தி​களில் மீண்​டும் ஒரு பெரும் வெள்​ளப் பாதிப்பை இது உரு​வாக்​கும். நீர்​நிலைகளைப் பாது​காப்​பது தொடர்​பான இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டப் பிரிவு​கள் மற்​றும் உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​பு​களுக்கு முரணாக இத்​திட்​டம் அமைந்​துள்​ளது.

2017-ம் ஆண்டு சிஏஜி வெளி​யிட்ட அறிக்​கை​யில், நீர்​நிலைகளை ஆக்​கிரமித்து கட்​டப்​படும் கட்​டிடங்​களே சென்​னை​யின் வெள்​ளப் பாதிப்​புக்கு முதன்​மைக் காரணம் எனக் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. தற்​போது, அதே தவறையே பரந்தூர் திட்​டத்​தி​லும் அரசு மீண்​டும் செய்​துள்​ளது.

இந்​நிலை​யில், விமான நிலை​யம் அமைய பரந்தூர் தகுந்த இடமா என்​பது குறித்து சாத்​தி​யக்​கூறு மற்​றும் சுற்​றுச்​சூழல் தாக்​கங்​களை மதிப்​பிட தமிழக அரசு மாநில நிபுணர் குழுவை மச்சேந்​திர​நாதன் ஐஏஎஸ் தலை​மை​யில் அமைத்​தது.

ஆனால், அந்தக் குழு​வின் அறிக்கை இது​வரை வெளி​யிடப்​பட​வில்​லை. எனவே, அந்த அறிக்​கையை முழு​மையாக பொது​மக்​கள் முன்​னிலை​யில் வெளி​யிட வேண்​டும்.

நீரியல் மற்​றும் வெள்ள மா​திரி ஆய்​வு​களை முறை​யாக மேற்​கொண்ட பின்​னரே அடுத்​தகட்ட முடிவை எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கைய வெளியிட வேண்டும்: உவகை ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தல்
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: முன்னாள் ராணுவ வீரர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in