தடை ரத்துக்கு எதிராக மேல்முறையீடு: கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு

பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்லும் விவகாரம்
அமைச்சர் டி.கே.பிரபு

அமைச்சர் டி.கே.பிரபு

Updated on: 
1 min read

திருப்புவனம்: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதற்கான தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும் என கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக கனிம வளங்கள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததுள்ளது. அதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும்.

தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் தரமாகவும், குறைந்த விலையில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய வாய்ப்பு இருந்தால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் எங்குமே மணல் கொள்ளை நடைபெறக் கூடாது என்பதே முதல்வரின் நோக்கம். கனிமவளக் கொள்ளை தொடர்பாக புகார்கள் வந்தாலோ, ஊடகங்களில் செய்திகள் வெளியானாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சீமைக்கருவேல மரங்களை அகற்றினாலும் மீண்டும் வளர்ந்து விடுகின்றன. இதனால் அகற்றும் பணியை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியநிலை உள்ளது. சீமைக்கருவேல மரங்களை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த அரசு திட்டம் வகுத்து வருகிறது.

மேலும், வைகை ஆற்றைத் சீரமைப்பது குறித்து நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் டி.கே.பிரபு</p></div>
சோத்துப்பாறை அணையை அத்துமீறி திறந்த தவெக நிர்வாகிகள் - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடிவு

X