குதிரை பேரத்துக்கு ஆளுநரின் செயல்பாடே காரணம்: எம்.ஏ.பேபி குற்றச்சாட்டு

குதிரை பேரத்துக்கு ஆளுநரின் செயல்பாடே காரணம்:  எம்.ஏ.பேபி குற்றச்சாட்டு
Updated on
2 min read

மதுரை: தமிழகத்​தில் குதிரை பேரத்​துக்கு ஆளுநரின் செயல்​பாடே காரணம் என மார்க்சிஸ்ட் கட்​சி​யின் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் எம்​.ஏ. பேபி குற்​றம் சாட்​டி​னார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ஏ.பெரு​மாள் குறித்த நூல் வெளி​யீட்டு விழா மதுரையில் நேற்று நடை​பெற்​றது. இதில் மார்க்​சிஸ்ட் கட்சியின் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் எம்​.ஏ.பேபி பங்​கேற்று நூலை வெளி​யிட்​டார்.

அதனைத் தொடர்ந்​து, அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஜோசப் விஜய் தலை​மை​யில் தொடங்​கப்​பட்ட ‘தமிழக வெற்​றிக் கழகம்’ தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்​ளது.

இந்​தக் கட்​சியை மக்​கள் ஏறக்​குறைய தேர்ந்​தெடுத்தே விட்​டனர். ஆனால், அவர்​களின் பெரும்​பான்​மைக்கு 11 இடங்​கள் குறை​வாக உள்​ளன. தனிப்​பெரும் கட்​சியை அழைப்​பது அல்​லது தேர்​தலுக்​குப் பிந்​தைய கூட்​ட​ணி​யாக இணைந்​து, பெரும்​பான்மை பலம் கொண்ட பல்​வேறு கட்​சிகளை ஆளுநர் அழைப்​பதே மரபாகும்.

ஆனால், தமிழக பொறுப்பு ஆளுநர், காலத்​தால் மெய்ப்​பிக்​கப்​பட்ட இந்த ஜனநாயக மரபை​யும், நடை​முறையை​யும் பின்​பற்​ற​வில்​லை. விஜய் தனது பெரும்​பான்​மையை எவ்​வாறு நிரூபிக்​கப் போகிறார் என்​ப​தைத் தெரிந்​து​கொள்ள ஆளுநர் விரும்​பு​கிறார். மரபு​களின்​படி பார்த்​தால், அது ஆளுநருக்​குச் சம்​பந்​தப்​பட்ட விஷ​யம் அல்ல.

90-களில் பாஜக​வின் தலை​வ​ராக இருந்த வாஜ்​பாய்க்கு பெரும்​பான்மை பலம் இருக்​க​வில்​லை. தனக்​குப் பெரும்​பான்மை கிடைக்​கும் என்​பதை நிரூபிப்​ப​தற்​கான எண்​ணிக்கை கூட, அவரிடம் அப்​போது இருக்​க​வில்​லை. ஆயினும், அவர் பிரதம​ராகப் பதவி​யேற்​றார். அதுவே ‘13 நாள் அதிச​யம்’ என்று அழைக்​கப்​பட்​டது. பின்​னர், அவர் பதவி விலக நேர்ந்​தது.

அடுத்​து, கர்​நாட​கா​வில் ‘எஸ்​.ஆர். பொம்மை வழக்​கில்’ உச்ச நீதி​மன்​றம் ஒரு தெளி​வான தீர்ப்பை வழங்கி உள்​ளது. ஒரு கட்​சி​யின் அல்​லது கூட்​ட​ணி​யின் பலம் சோதிக்​கப்பட வேண்​டிய இடம் ஆளுநர்மாளிகை அல்ல. சட்​டப்​பேர​வை​யில் நடக்க வேண்​டும் எனக் கூறியது. ஆனால், இந்த அடிப்​படை நெறி​முறை, ஆளுந​ரால் நிராகரிக்​கப்​பட்டு வரு​கிறது. எனவே, இதற்கு எதி​ராகக் கண்​டனம் தெரி​வித்து அறிக்கை வெளி​யிட்​டோம்.

டில்​லி​யின் ஆதரவு மற்​றும் முயற்​சிகளு​டன், தமிழக மக்​களின் தேர்​தல் தீர்ப்​புக்கு எதி​ராகச் செயல்​படும் வகையி​லான சில தந்திர​மான நகர்​வு​கள் நடை​பெறு​வ​தாக எங்​களுக்​குத் தெரியவந்​தது. அதாவது, என்டிஏ கூட்​ட​ணி​யில் அங்​கம் வகித்த அதி​முக தலை​மை​யில் ஒரு அரசாங்​கத்தை அமைப்​ப​தற்காக, சென்​னை​யில் உள்ள அதி​கார மையத்​தில் ‘பின்​வாசல் வழி​யாக’ சில தந்​திர​மான முயற்​சிகள் நடப்​ப​தாக தெரிய​வந்​தது. எங்​கள் கட்​சி​யில் இதுகுறித்து விவா​தித்​தோம்.

தமிழக தேர்​தல் தீர்ப்​பின் உணர்​வைச் சிதைக்​கும் வகை​யிலும், பாஜக​வின் கூட்​ட​ணிக் கட்​சியை ஆட்​சி​யில் அமர்த்​தும் வகை​யிலும் நகர்​வு​கள் நடை​பெறு​வ​தால், மிகப்​பெரிய ஒற்​றைக் கட்​சி​​யான தவெக தலை​மை​யில் அரசு அமைய ஆதரவு கடி தத்தை ஆளுநருக்கு தந்தோம். இந்த முடிவு தொடர்​பாக இரு கம்​யூனிஸ்ட் கட்​சிகளும் இணைந்து திமுக தலை​மையை தொடர்​பு​கொண்டு விளக்​கம் அளிப்​போம். நாங்​கள் திமுக​வுட​னும் தொடர்​பில் இருந்து வரு​கிறோம். குதிரை பேரம் தொடர்​பான விவாதங்​கள் எழு​வதற்கு ஆளுநரின் செயல்​பாடே காரணம். இவ்​வாறு கூறி​னார்.

இந்​நிகழ்​வின்போது மத்​திய கட்​டுப்​பாட்​டுக் குழுத் தலை​வர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்​குழு உறுப்​பினர் மதுக்​கூர்ராமலிங்​கம், மாநகர் மாவட்​டச் செய​லா​ளர் மா.கணேஷ், மாநிலக் குழு உறுப்​பினர்​கள் இரா.விஜய​ராஜன், எஸ்.பாலா உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

குதிரை பேரத்துக்கு ஆளுநரின் செயல்பாடே காரணம்:  எம்.ஏ.பேபி குற்றச்சாட்டு
முதல்வராக விஜய் இன்று பதவியேற்கிறார்: 13-ம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in