தமிழகத்தின் வளர்ச்சியில் மக்கள் பங்காற்ற வேண்டும்: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அழைப்பு

தமிழகத்தின் வளர்ச்சியில் மக்கள் பங்காற்ற வேண்டும்: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அழைப்பு
Updated on: 
1 min read

சென்னை: தேர்​தலில் வாக்​களிப்​ப​துடன் நின்​று​விடா​மல் தமிழகத்​தின் வளர்ச்சியிலும் மக்​கள் தங்​கள் பங்​களிப்பை வழங்க வேண்​டும் என தமிழக ஆளுநர் ராஜேந்​திர விஸ்வநாத் அர்​லேகர் கூறி உள்​ளார்.

சென்னை கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் ‘தமிழ்​நாடு தினம்’ நேற்று வெகு விமரிசையாக கொண்​டாடப்​பட்​டது. இதில் தமிழக ஆளுநர் ராஜேந்​திர விஸ்வநாத் அர்​லேகர், இஸ்ரோ தலை​வர் நாராயணன் ஆகியோர் குத்​து​விளக்கு ஏற்றி நிகழ்ச்​சியை தொடங்கி வைத்​தனர்.

மெட்​ராஸ் வளர்ச்சி ஆய்​வு​கள் நிறு​வனத்​தின் இயக்​குநர் சுரேஷ் பாபு, இஸ்ரோ விஞ்​ஞானி வீர​முத்​து​வேல் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். சமூகவளர்ச்சி, கல்வி, மருத்​து​வம், அறி​வியல், பொருளாதா​ரம் உள்​ளிட்ட துறைகளில் அளப்​பரிய பங்​களிப்​பைச் செய்த 6 பேருக்கு விருது வழங்கி கவுர​விக்​கப்​பட்​டது.

இதில் தொழில்​துறை​யில் சிறந்த சேவைக்​கான விருதை ஆளுநரிடம் இருந்து ராம்கோ சிமென்ட்ஸ் நிறு​வன தலைமை செயல் அதி​காரி ஏ.வி. தர்​மகிருஷ்​ணன் பெற்​றுக்​கொண்​டார்.

நிகழ்ச்​சி​யில் இஸ்ரோ தலை​வர் நாராயணன் பேசுகை​யில் “தமிழ்​நாடு உரு​வாகி 70-வது ஆண்டை கொண்​டாடும் தருணத்​தில் மாநிலத்​தின் வளர்ச்​சியை நாம் நினைவு​கூர வேண்​டும். 25 சதவீத​மாக இருந்த கல்​வியறிவு 85 சதவீதத்தை எட்டி கல்​வித் துறை​யில் புரட்சி ஏற்​பட்​டுள்​ளது.

அதேபோல், ஆட்​டோமொபைல், தோல் பொருட்​கள், மின்​னணுவியல் உள்​ளிட்ட பல்​வேறு தொழில் துறைகளில் தமிழ்​நாடு முன்​னணி மாநிலமாகத் திகழ்​கிறது.

அமெரிக்​கா​விட​மிருந்து ராக்​கெட்​டைப் பெற்று விண்​வெளிப் பயணத்​தைத் தொடங்​கிய இந்​தியா, தற்​போது 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்​கைக்​கோளை வணிக ரீதி​யாக விண்​ணில் செலுத்​தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்​துள்​ளது.

இந்​தி​யா​வும் தமிழ்​நாடும் பல்​வேறு துறைகளில் அடைந்​துள்ள வளர்ச்​சிக்​குப் பல தலைமுறைகளின் உழைப்​பும் பங்​களிப்​பும் காரண​மாகும்” என்​றார்.

தொடர்ந்து ஆளுநர் ராஜேந்​திர விஸ்வநாத் அர்​லேகர் பேசிய​தாவது: தமிழகத்​தின் ஆளுநராக இருப்​ப​தில் பெருமை கொள்​கிறேன். இம்​மாநிலத்​தில் அனைத்​துத் திறன்​களும் வளங்​களும் உள்​ளன.

எனவே, மாநிலத்​தின் வளர்ச்​சியை முன்​னெடுத்​துச் செல்​லும் ஆற்​றல் மக்​களிடமே உள்​ளது. அரசி​யல் காரணங்​களுக்​காக இல​வசப் பொருட்​களை​யும் திட்​டங்​களை​யும் அறி​விப்​பது ஒரு போக்​காக மாறியுள்​ளது.

மக்​களுக்கு இல​வசங்​களை அறி​வித்து வாக்​கு​களைப் பெறு​வது மட்​டுமே நோக்​க​மாக இருக்​கக் கூடாது. வளர்ச்​சி​யில் மக்​களின் பங்​களிப்பு என்​பது தேர்​தலில் வாக்​களிப்​ப​துடன் முடிந்​து​விடக் கூடாது.

நாட்​டின் நிர்​வாகத்​திலும் வளர்ச்​சிப் பணிகளி​லும் மக்​கள் நேரடி​யாகவும் முனைப்​புடனும் பங்​கேற்க வேண்​டும். அரசின் செயல்​பாடுகளில் சமூகத்​தின் பங்​களிப்​பும், மக்​கள் பங்​கேற்​பும் மிகவும் அவ​சி​ய​மாகும். இவ்​வாறு அவர் கூறினார்.

தமிழகத்தின் வளர்ச்சியில் மக்கள் பங்காற்ற வேண்டும்: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அழைப்பு
முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் சேகர்பாபு ஆஜர்

X