‘கனிமவளங்கள் விற்பனையை அரசே நடத்த திட்டம்’ - அமைச்சர் டி.கே.பிரபு தகவல்

‘கனிமவளங்கள் விற்பனையை அரசே நடத்த திட்டம்’ - அமைச்சர் டி.கே.பிரபு தகவல்
Updated on: 
1 min read

காரைக்குடி: கனிமவளங்​களை அரசே நேரடி​யாக விற்​பனை செய்​வது குறித்து விரைவில் அறி​விப்பு வெளி​யிடப்​படும் என்று அமைச்​சர் டி.கே.பிரபு தெரி​வித்​தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சி​யர் அலு​வல​கத்​தில் மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சார்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் மகளிர் சுயஉத​விக் குழுக்​களுக்கு தொழில் முனைவோருக்​கான வங்கி கடனுத​வி​களை கனிமவளத்​துறை அமைச்​சர் டி.கே.பிரபு வழங்​கினார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்​லிக்​கற்​கள் உள்​ளிட்ட கனிமவளங்​களை அரசே நேரடி​யாக விற்​பனை

செய்​வது குறித்த திட்​டம் ஆய்​வில் உள்​ளது. இது​குறித்து விரைவில் அறி​விப்பு வெளி​யிடப்​படும். கனிமவளங்​களை எடுத்​துச் செல்​லும் பணி​யில் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக​னங்​கள் ஈடு​பட்​டுள்ள நிலை​யில், இது​வரை 10,000 வாக​னங்​களுக்கு ஜிபிஎஸ் கரு​வி​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.

ஜிபிஎஸ் பொருத்​தாத வாக​னங்​களில் கனிமவளங்​களை கொண்டு சென்​றால் நட​வடிக்கை எடுக்​கப்​படும். ஜிபிஎஸ் பொருத்​தினால்​தான் கனிமவள முறைகேடுகளை தடுக்க முடியும். தவறுகள் நடந்​தா​லும் தெரிந்​து​கொள்ள முடியும். கனிமவளத்​துறையை முழு​மையாக டிஜிட்​டல்​மய​மாக்க முதல்​கட்​டப்பணியை தொடங்​கி​யுள்​ளோம்.

சிவகங்​கை​யில் கிடைக்​கும் கிராபைட்​டின் தரம் குறித்து சிக்ரி மற்​றும் அழகப்பா பல்​கலைக்​கழக ஆய்​வாளர்​கள் ஆய்வு செய்து வரு​கின்​றனர். அவர்​கள் தரும் அறிக்​கை​யின் அடிப்​படை​யில் புதிய கிராபைட் ஆலைகளை தொடங்​கு​வது குறித்து முடிவு செய்​யப்​படும். தவெக​வினருக்கு மட்​டுமே ஒப்​பந்​தப் பணிகளை ஒதுக்​கிய​தாக கூறு​வது தவறானது.

சட்​ட​விரோத வெடிமருந்​துகளை பயன்​படுத்​தும் குவாரி​களுக்கு தடை விதிக்​கப்​படும். மேட்​டூர் உள்​ளிட்ட அணைகளை தூர்​வாரி மணலை பயன்​படுத்​தும் விரிவான திட்​டம் நீர்​வள ஆதா​ரத்​துறை அமைச்​சரால் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. அதற்​கான அறி​விப்பு விரைவில் வெளி​யிடப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்.

‘கனிமவளங்கள் விற்பனையை அரசே நடத்த திட்டம்’ - அமைச்சர் டி.கே.பிரபு தகவல்
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க திமுக வலியுறுத்தல்

X