கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் 900 பவுன் நகை திருடு போனதாக புகார்

மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் 900 பவுன் நகை திருடு போனதாக புகார்
Updated on
1 min read

கோவை: கோவை​யில் ரியல் எஸ்​டேட் அதிபர் வீட்​டில் 900 பவுன் நகை திருடு போனது தொடர்​பான புகாரில், டாக்​டர் மரு​மகன் மற்றும் குடும்​பத்​தினர் மீது போலீ​ஸார் வழக்கு பதிந்தனர்.

கோவை கணபதி மாநகர் எஸ்​.ஆர்​.​வி. நகரைச் சேர்ந்தவர் எஸ்.சண்​முக பாண்​டியன். ரியல் எஸ்​டேட் உரிமை​யாளர். இவர், கோவை மாநகர குற்​றப்​பிரிவு போலீ​ஸாரிடம் கடந்த 3-ம் தேதி அளித்த புகார் மனு:

எனது இளைய மகள் மருத்​து​வர் கவுசல்​யா​வுக்​கும், பெரியநாயக்​கன்​பாளை​யம் ஜோதிபுரத்​தைச் சேர்ந்த மருத்​து​வர் விக்​னேஷ்-க்​கும் கடந்த 2024-ல் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மணம் முடிந்​தவுடன், எனது சம்​பந்தி முரு​கேசன்- வாசுகி, அவர்களது மகள் ஜீவிதா ஆகிய மூவரும் காளப்​பட்​டி​யில் உள்ள எனக்​குச் சொந்​த​மான சுமார் 1 ஏக்​கர் பரப்​பளவி​லான பங்​களா​வுக்கு குடியேறினர்.

மரு​மகன் விக்​னேஷ் மீது வைத்திருந்த நம்​பிக்​கையால் லாக்​கர் மற்​றும் பீரோ சாவியை அவரிடம் ஒப்​படைத்​தேன். அதில் 1000 பவுன் நகைகள் இருந்​தன. பின்​னர், காளப்​பட்​டி​யில் உள்ள எனது பங்களாவை தனது பெயருக்கு எழுதி வைக்க விக்​னேஷ் எனது மகளிடம் வலி​யுறுத்​தி​னார். இதையறிந்த நான் கடந்​தாண்டு அந்த பங்​களாவை விற்​று​விட்​டேன்.

இதனால் கோபமடைந்த விக்​னேஷ் எனது மகளிடம் பிரச்​சினை செய்​யத் தொடங்​கி​னார். பின்​னர், எனது மகளை விட்டு​ விட்​டு, விக்​னேஷ் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் சிட்ரா​வில் உள்ள ஒரு வீட்​டில் குடியேறினர். ஆனால் எனது பீரோ மற்​றும் லாக்​கர் சாவியை விக்​னேஷ் தர மறுத்​து​விட்​டார்.

இதனால் சந்​தேகமடைந்த நான், லாக்​கரை உடைத்து பார்த்​த​போது, அதில் 1000 பவுன் நகைகள் இல்​லை. இதுபற்றி கேட்​டதற்கு 100 பவுன் நகைகளை மட்​டும் விக்​னேஷ் திரும்​பிக் கொடுத்​தார். மீதம் உள்ள 900 பவுனை திரும்​பிக் கொடுக்​க​வில்​லை. இவற்​றின் மதிப்பு ரூ.10 கோடி​யாகும். நகைகளை கேட்​ட​போது, விக்​னேஷ் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் கொலை மிரட்​டல் விடுத்​தனர். இதுதொடர்​பாக போலீ​ஸார் விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இதுகுறித்த புகாரின் பேரில், விக்​னேஷ் மற்​றும் அவரது தாயார் வாசுகி, சகோ​தரி ஜீவிதா ஆகியோர் மீது 3 பிரிவு​களின்​கீழ் வழக்​குப் பதிந்து கோவை மாநகர குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் 900 பவுன் நகை திருடு போனதாக புகார்
போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in