மக்கள் விரும்பும் முதல்வர் பழனிசாமி: ஜி.கே.வாசன் கருத்து

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

Updated on
1 min read

கும்​பகோணம் தொகுதி தமாகா வேட்​பாளர் அசோக்​கு​மாரை ஆதரித்து உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் அருகே தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், புதுச்​சேரி உள்​துறை அமைச்​சர் நமச்​சி​வா​யம் ஆகி​யோர் நேற்று இறு​திக்​கட்ட பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

இதில், ஜி.கே.​வாசன் பேசி​ய​தாவது: கும்​பகோணம் ஆன்​மிக தொகுதி என்​ப​தால், திமுக அரசும், எம்​எல்​ஏ​வும் இந்​தத் தொகு​தியை ஒதுக்கி வைத்​திருக்​கின்​ற​னர். கும்​பகோணத்​தின் வளர்ச்​சியை கட்​டுப்​படுத்த நினைக்​கின்​ற​னர். திமுக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால், இதே நிலை தொடரும். இதற்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும்.

தமி​ழ​கத்​தில் பழனி​சாமி முதல்​வ​ராக இருந்​த​போது மக்​கள் விரும்​பும் முதல்​வ​ராக எளிமை​யின் இலக்​கண​மாக அவர் திகழ்ந்​தார். அமைச்​சர்​களை எளி​தில் சந்​திக்க முடிந்​தது. அதி​காரி​கள் சுதந்​திர​மாக செயல்​பட்​டனர். அனைத்​துத் துறை​களி​லும் தமி​ழ​கம் வளர்ச்சி அடைந்​தது.

மத்​தி​யில் பிரதமர் மோடி நல்​லர​சாக நடத்தி வரு​கி​றார். வரும் ஆண்​டு​களில், இந்​தி​யாவை வல்​லர​சாக மாற்​று​வார். அதற்கு துணை​யாக தமி​ழ​கம் வளர வேண்​டுமெனில் தமிழக முதல்​வ​ராக பழனி​சாமி வர வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

<div class="paragraphs"><p>ஜி.கே.வாசன் </p></div>
புரட்சிக்குத் தலைமை தாங்குவேன்! - காரைக்குடியில் சீமான் ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in