“மக்கள் மனநிலைக்கு நேர்மாறாக திமுக கூட்டணியில் தேமுதிக” - ஜி.கே.வாசன் கருத்து

திருச்சியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் இருந்து நேற்று விருப்ப மனுக்களை பெற்று கொண்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

திருச்சியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் இருந்து நேற்று விருப்ப மனுக்களை பெற்று கொண்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

Updated on
1 min read

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது தமிழக மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமாகா சார்பில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மண்டல, மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் ஜி.கே.வாசனிடம் விருப்ப மனுக்களை வழங்கினர்.

முன்னதாக, ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜயகாந்த் இருந்தவரை திமுக-வுடன் தேமுதிக கூட்டணி அமைக்கவில்லை. தற்போது திமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது மக்கள் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது. ஆனால், மக்கள் ஆதரவு அதிகம் உள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.

மாநில சுயாட்சிக்காக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவர்கள் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்தபோதே இதைச் செய்திருக்கலாமே? திமுக அரசின் மீது மக்கள் கோபமாக இருப்பதால் மாநில சுயாட்சி, ஆளுநர் மீது புகார் என மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். தங்களை ஏமாற்றிய திமுக-வுக்கு எதிராக வாக்களித்து மக்கள் அவர்களை ஏமாற்றுவார்கள்.

தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும் என்பதை நோக்கியே என்கவனம் உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் குறித்து தற்போது நாங்கள் யோசிக்கவில்லை. லாப நஷ்டங்களை தாண்டி கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி தமாகா தான். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>திருச்சியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் இருந்து நேற்று விருப்ப மனுக்களை பெற்று கொண்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.</p></div>
“விஜய் மீது நம்பிக்கையில்லாததால் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை” - சீமான் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in