“எங்களை தாக்க நினைத்தால் தாக்குங்கள்; வாக்களித்த மக்களை தாக்காதீர்கள்” - திமுகவுக்கு கிரிஷ் சோடங்கர் பதிலடி

“எங்களை தாக்க நினைத்தால் தாக்குங்கள்; வாக்களித்த மக்களை தாக்காதீர்கள்” - திமுகவுக்கு கிரிஷ் சோடங்கர் பதிலடி
Updated on
2 min read

சென்னை: “எங்​களை நீங்​கள் தாக்க நினைத்​தால் தாராள​மாகத் தாக்​குங்​கள், ஆனால் வாக்​களித்த தமிழக மக்​களைத் தாக்​காதீர்​கள்” என திமுக​வினருக்கு தமிழக காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் பதிலடி கொடுத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில் கூறியிருப்பதாவது: “எங்​களை நீங்​கள் தாக்க நினைத்​தால் தாராள​மாகத் தாக்​குங்​கள், ஆனால் வாக்​களித்த தமிழக மக்​களைத் தாக்​காதீர்​கள். எங்​களை விமர்​சிக்க ஒவ்​வொரு அரசி​யல் கட்​சிக்​கும் உரிமை உண்​டு. அதற்​காக நாங்​கள் ஒரு​போதும் ஆத்​திரப்பட மாட்​டோம்.

ஆனால் தமிழக மக்​கள் வழங்​கிய ஜனநாயகத் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்​கவோ அவம​திக்​கவோ கூடாது. தமிழக மக்​கள் அரசி​யல் முதிர்ச்சி உடைய​வர்​கள்; அவர்​கள் புத்​திக் கூர்​மை​யுட​னும் தெளிவுட​னும் வாக்​களிப்​பவர்​கள். எங்​களது தலை​வர்​கள் அல்​லது எங்​களது கட்​சிக்கு எதி​ரான தனிப்​பட்ட விமர்​சனங்​களுக்கு பதிலளிக்​கக் கூடாது என்று நாங்​கள் விழிப்​புணர்​வுடன் முடிவு செய்​தோம்.

நாங்​கள் நினைத்​திருந்​தால், ஒரு தசாப்த கால​மாக முக்​கிய அமைச்​சரவை பதவி​களை​யும் அதி​காரத்​தை​யும் அனுப​வித்​து​விட்​டு, 2014 மக்​கள​வைத் தேர்​தலில் இழைக்​கப்​பட்ட மாபெரும் துரோகத்தை அனை​வருக்​கும் நினை​வூட்​டி​யிருக்க முடி​யும். ஆனால் நாங்​கள் அதைச் செய்​ய​வில்​லை.

தமிழக வரலாற்​றில் அவர்​கள் (தி​முக) ஒரு​போதும் மீண்​டும் ஆட்​சி​யைப் பிடித்​த​தில்லை (தொடர்ந்து இரண்​டாவது முறை ஆட்சி அமைத்​த​தில்​லை) என்​பதை நன்​றாக அறிந்​திருந்​தும், எங்​களுக்கு வெற்றி வாய்ப்​பு​கள் இருந்​த​போ​தி​லும் அந்த கூட்​ட​ணி​யில் இணைந்​தோம். மக்​களின் தீர்ப்பை பணிவுட​னும் பெருந்​தன்​மை​யுட​னும் மதிப்​பதே எங்​கள் கோட்​பாடு'' எனத் தெரி​வித்​துள்​ளார்.

புதிய மாற்றத்தை விரும்பினர்

இதே​போல் கிருஷ்ணகிரி முன்​னாள் எம்பி செல்​ல​கு​மார், “அவர்​கள் தரம் தாழ்ந்து போய்​விட்​டார்​கள் என்​ப​தற்​காக காங்​கிரஸ் தரம் தாழ்ந்து போய்​விட முடி​யாது. ஒவ்​வொரு​வரும் தங்​களு​டைய ஆழ்​மன​தில் என்ன இருக்​கிறதோ அதைத்​தான் வார்த்​தைகளாக வெளிப்​படுத்​து​வார்​கள்.

ஆகவே தரம் தாழ்ந்து பேசும் மனிதர்​களுக்கு காங்கிரஸ் கட்சி ஒரு​போதும் முக்​கி​யத்​து​வம் கொடுத்​தது இல்​லை. மக்​கள் மாற்​றத்தை வேண்​டும் என வாக்​களித்​திருக்​கிறார்​கள். அதி​காரத்​தில் இருந்​தவர்​கள் செய்த தவறுகள், அரசி​யல்​வா​தி​களின் அராஜகம் ஆகிய​வற்​றைக் கண்​டித்து புதிய மாற்​றத்​துக்​காக மக்​கள் விரும்​பி​னார்​கள்.

யாராக இருந்​தா​லும் இதை ஜனநாயக ரீதி​யாக ஏற்​றுக்​கொள்ள வேண்​டும். அது​தான் அரசி​யல் இயக்​கத்​துக்கு சிறந்த எடுத்​துக்​காட்​டு.

திமுக ஆட்சி மீதான அதிருப்​தி​தான் காங்​கிரஸ் வேட்பாளர்கள் தோல்​வியடையக் காரண​மாக இருந்​தது. அந்த ஆட்சி மீது இருந்த ஊழல் குற்​றச்​சாட்​டுக்​கள்​தான் மக்​கள் கொந்​தளித்து வரு​வதற்கு காரண​மாக இருந்​தது.

ஆனால் பாஜக எந்த விதத்​தி​லும் ஆட்சி அதி​காரத்​துக்கு வந்​து​விடக்​கூ​டாது என்​ப​தற்​காகவே திமுகவுடன் தேர்​தல் கூட்​டணி வைத்​தோம். அதனால் அதி​காரத்​தில் எங்​களுக்கு எந்​தப் பலனும் கிடைக்​க​வில்​லை. அனிதா ராதாகிருஷ்ணன் எந்​தக் கட்​சிக்கு விசு​வாச​மாக இருந்​தார். நாளைக்கு அவர் காங்​கிரஸில் வந்து ஐக்​கிய​மா​னால் கூட ஆச்​சரியப்​படு​வதற்கு இல்​லை'' எனத் தெரி​வித்​துள்​ளார்.

இதே​போல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த பல தலை​வர்​களும் தி​முக இளைஞரணி நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் காங்​கிரஸைக் கண்​டித்து நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானம் மற்​றும்​ தி​முக தலை​வர்​களின்​ கருத்​துகளுக்​கு கடும்​ எதிர்ப்​பு தெரிவித்​து வருகின்​றனர்​.

“எங்களை தாக்க நினைத்தால் தாக்குங்கள்; வாக்களித்த மக்களை தாக்காதீர்கள்” - திமுகவுக்கு கிரிஷ் சோடங்கர் பதிலடி
சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு: கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in