செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: கண்காணிப்பு வளையத்தில் சிறுமியின் தாய்

2-வது நாளாக சிபிசிஐடி விசாரணை
செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: கண்காணிப்பு வளையத்தில் சிறுமியின் தாய்
Updated on: 
1 min read

விழுப்புரம்: செஞ்சி அருகே சிறுமி மாய​மான விவகாரத்​தில் 2-வது நாளாக விசா​ரணை​யைத் தொடர்ந்​துள்ள சிபி​சிஐடி போலீ​ஸார், சிறுமி​யின் தாயையும் தங்​கள் கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வந்​துள்​ளனர்.

விழுப்​புரம் மாவட்​டம் செஞ்​சியை அடுத்த ஆலம்​பூண்டி ஊராட்சி நடுப்​பட்டு கிராமத்​தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி நள்​ளிரவு மாய​மானார். இது​குறித்து சிறுமி​யின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சத்​தி​யமங்​கலம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். எஸ்பி மதிவாணன் மேற்​பார்​வை​யில் 8 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன.

10 நாட்​களாகி​யும் சிறுமியை கண்​டு​பி​டிக்​காததால் வழக்கை சிபி​சிஐடிக்கு மாற்றி கடந்த 21-ம் தேதி இரவு தமிழக அரசு உத்​தர​விட்​டது. இதையடுத்து எஸ்பி ஜவகர் தலை​மையி​லான சிபி​சிஐடி போலீ​ஸார், நடுப்​பட்டு கிராமத்​தில் நேற்று முன்​தினம் விசா​ரணை​யைத் தொடங்​கினர். 2-வது நாளாக நேற்​றும் விசா​ரணை​யைத் தொடர்ந்​தனர். சிறுமியை திட்​ட​மிட்டு கடத்​திச் சென்​றிருக்​கலாம் என்ற கோணத்​தில் சிபி​சிஐடி போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

சிறுமி​யின் தாய் பயன்​படுத்தி வரும் செல்​போன் எண்​ணில் பதிவான அழைப்​பு​களின் எண்​கள் அடங்​கிய பட்​டியலை தனிப்​படை போலீ​ஸாரிடம் முதல்​கட்​ட​மாக பெற்​றுள்​ளனர். இதில் அடிக்​கடி பேசி​ய​வர்​கள், நீண்ட நேரம் பேசி​யவர்​களின் விவரம் குறித்து சிறுமி​யின் தாயிடம் விசா​ரித்​துள்​ளனர். மேலும், சிறுமி​யின் தாய் மீதும் சந்​தேகம் எழுந்​ததால், அவரை தங்​களது கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வந்​துள்​ளனர். செஞ்​சி​யில் இருந்து திரு​வண்​ணா​மலை வரை செல்​லும் சாலை​யில் இருக்​கும் கண்​காணிப்பு கேம​ராக்​களில் பதிவான காட்​சிகளை​யும் பெற்​றுள்​ளனர்.

இதனிடையே, விழுப்​புரத்​தில் மாவட்ட எஸ்பி மதிவாணனை சிபி​சிஐடி டிஎஸ்பி கீதா தலை​மையி​லான குழு​வினர் நேற்று முன்​தினம் இரவு சந்​தித்து ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது வழக்கு தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் சேகரித்த தடயங்​கள், தகவல்​களை தெரி​வித்து, விசா​ரணைக்கு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என கேட்​டுக் கொண்​டுள்​ளனர். சிறுமி மாய​மான வழக்கு தொடர்​பான ஆவணங்​கள் சிபி​சிஐடி வசம் ஒப்​படைக்​கப்​பட்​ட​தாக விழுப்​புரம் மாவட்ட காவல் அலு​வலக தரப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: கண்காணிப்பு வளையத்தில் சிறுமியின் தாய்
69 பேருக்கு பணி நியமன ஆணை - முதல்வர் விஜய் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in