ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு: காங்கிரஸ் நிர்வாகியிடம் 2-வது முறையாக விசாரணை

‘ஜெம்’ வீரமணி

‘ஜெம்’ வீரமணி

Updated on: 
1 min read

சென்னை: ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு விவ​காரம் தொடர்​பாக காங்​கிரஸ் நிர்​வாகி ரஞ்​சன் குமாரிடம் 2-வது முறை​யாக சிறப்பு புல​னாய்வுக் குழு​வினர் விசா​ரணை நடத்​தினர்.

சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்​யப்​பட்டு சிறை​யில் உள்​ளார். சிறுமிகள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​ட​தாக 2025 அக்​டோபர் 6-ம் தேதி புகார் அளிக்​கப்​பட்​ட​தாக​வும், மறு​நாளே சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​த​தாக​வும் காவல்​துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. ஆனால், 2024-ம் ஆண்டே உரிய ஆதா​ரங்​களு​டன் காவல் துறை​யில் புகார் தெரி​வித்​தாக காங்​கிரஸ் நிர்​வாகி ரஞ்​சன் குமார் தெரி​வித்திருந்​தார்.

இதையடுத்​து, அவரை அழைத்து சிறப்பு புல​னாய்வுக் குழு போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். வழக்கு தொடர்​பாக அவருக்கு தெரிந்த தகவல்​கள் மற்​றும் அவரிடம் இருந்த ஆதா​ரங்​கள் குறித்து அதி​காரி​கள் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பினர். அவர் அளித்த தகவல்​களை பதிவு செய்து கொண்​டனர்.

இந்​நிலை​யில், நேற்று 2-வது முறை​யாக ரஞ்​சன் குமாரிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. விசா​ரணை முடிந்து வெளியே வந்த ரஞ்​சன் குமார் கூறும்போது, “கடந்த முறை விசா​ரணை நடத்​திய அதி​காரி​கள் வேறு, இன்று விசா​ரணை நடத்​திய குழு​வினர் வேறு. மீண்​டும் அனைத்து கேள்வி​களும் கேட்​கப்​பட்​டன. எனக்கு தெரிந்த அனைத்து தகவல்​களை​யும் விசா​ரணை குழு​விடம் தெளி​வாக தெரி​வித்​துள்​ளேன்’’ என்றார்.

<div class="paragraphs"><p>‘ஜெம்’ வீரமணி</p></div>
‘சொத்து விவரம் எதையும் மறைக்கவில்லை’ - முதல்வர் விஜய் தரப்பு வாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in