ரங்கசாமி - விஜய் இடையேயான நட்பு வேறு; அரசியல் நிலைப்பாடு வேறு: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

அமைச்சர் நமச்சிவாயம்

அமைச்சர் நமச்சிவாயம்

Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும், தமிழக முதல்வர் விஜய்க்குமான நட்பு வேறு, அரசியல் நிலைப்பாடு வேறு என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுவை அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்துள்ளது. புதுவை மாநில வளர்ச்சி தொடரும் என உத்தரவாதம் அளிக்கிறேன். புதுவை காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருது அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது காவல்துறை அதிகாரி முதல், காவலர்கள் மட்டுமின்றி மக்களுக்கும் பெருமை சேர்க்கக்கூடியது.

ஐஆர்பிஎன் 2-வது பட்டாலியன் அமைக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஐஆர்பிஎன் 2வது பட்டாலியன் அமைக்கப்பட்டால் 1,007 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும். இது புதுவை இளைஞர்களுக்கு வரப் பிரசாதம். டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினேன். அப்போது புதுவை வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளார். புதுவையில் தவெக 30 தொகுதியில் போட்டியிட்டு 17 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

ஆனால் பாஜக 10 தொகுதிகளில் போட்டியிட்டு 12 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. முதல்வர் ரங்கசாமி, புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அதேநேரத்தில் பாஜகவுக்கு பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை பிரச்சாரம் செய்துள்ளனர்.

எங்கள் தேசிய தலைமையும், முதல்வரும் பேசி அமைச்சரவை விரிவாக்கம், இலாகா, நியமன எம்எல்ஏ குறித்து முடிவு செய்வர். இது விரைவாக நடக்கும்.

லஜக தலைவர் அமைச்சர் பதவி கேட்பதால் தான் இந்தத் தாமதமா எனக் கேட்கிறீர்கள். அதுபோல் இல்லை. அகில இந்திய தலைமை முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கும். அரசியலை பொறுத்தவரை நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும், தமிழக முதல்வர் விஜய்க்குமான நட்பு வேறு, அரசியல் நிலைப்பாடு வேறு. தமிழகத்தில் முதல் முறை போட்டியிட்ட தவெக 107 இடங்களை பிடித்துள்ளது. திமுகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகளின் ஆதரவு மூலம் தான் ஆட்சிக்கு வந்துள்ளது. வரும் காலத்தில் தவெக செயல்பாடுகள் தான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும். அண்டை மாநிலத்துடன் நட்புடன் இருக்கும் வகையில் முதல்வர் செயல்படுகிறார்.

முதல்வர் ரங்கசாமியுடன் எனக்கு எந்தவித மன வருத்தமும் இல்லை. பாஜக தலைமை சொல்வதை கேட்டு செயல்படுவேன். அவர்கள் தரும் இலாகா பெறுவேன். தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வேட்பாளர் வெல்வார். தேர்தலில் பாஜக எம்எல்ஏ தொகுதி கடந்த முறையை குறைவாக வென்றுள்ளதை கட்சி தலைமை ஆய்வு செய்து வருகிறது. மேலிடத் தலைவர் புதுச்சேரி வந்து ஆராய்வார்” என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

<div class="paragraphs"><p><em>அமைச்சர் நமச்சிவாயம்</em></p></div>
தீ​பாவளிக்கு முன்பே வெளியாகிறது ‘ராமாயணம்’?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in