ஆண்கள், பெண்களுக்கு ‘ஆட்டோ இலவசம்’, அரசு ஊழியர்களுக்கு ‘2 மடங்கு கட்டணம்’ - மதுரை ஆட்டோ டிரைவரின் சவாரி அழைப்பு

ஆண்கள், பெண்களுக்கு ‘ஆட்டோ இலவசம்’, அரசு  ஊழியர்களுக்கு ‘2 மடங்கு கட்டணம்’ - மதுரை ஆட்டோ டிரைவரின் சவாரி அழைப்பு
Updated on: 
1 min read

வெற்றிப்பயண திட்டத்தால் பெரும்பாலான பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்வதால், தங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பது இல்லை, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடந்த ஒரு வாரமாக ஆட்டோ டிரைவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவது, போராட்டங்கள் மேற்கொள்வது என இந்த திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை கீழவாசல் பேருந்து நிறுத்தத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர், பேருந்துகளுக்காக காத்திருந்த பெண் பயணிகளிடம், ‘‘மாட்டுத்தாவணி, மாட்டுத்தாவணி இருக்கிறீர்களா, ‘ஆட்டோ ஃப்ரீ’, ‘ஆட்டோ ஃப்ரீ’மா, ஏறிக் கொள்ளுங்கள், மனசு இருந்தால் காசு கொடுங்கள், ‘ஆட்டோ ஃப்ரீ’ என்று சவாரிக்கு அழைத்துச் செல்கிறார். ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மாட்டுத்தாவணிக்கு ஆட்டோ ப்ரீ, ஏறிக்கோ, ஏறிக்கோ...., ஆனால், அரசாங்க ஊழியர்களுக்கு டபுள் சார்ஜ், என்றார்.

பலரும் ஆட்டோ டிரைவின் இந்த சவாரி அழைப்பை வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்கில் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆட்டோ டிரைவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்கில் ஆதரவும், எதிர்ப்பு கருத்துகளையும் நெட்டிசன்கள் பதிவு செய்தனர். ஒரு தரப்பினர் ‘தரமான சம்பவம்’, மற்றொரு தரப்பினர், ‘வீம்புக்கு செய்கிறார்’, போன்ற பதிவுகளை செய்து வருகின்றனர்.

ஆண்கள், பெண்களுக்கு ‘ஆட்டோ இலவசம்’, அரசு  ஊழியர்களுக்கு ‘2 மடங்கு கட்டணம்’ - மதுரை ஆட்டோ டிரைவரின் சவாரி அழைப்பு
‘மறப்போம், மன்னிப்போம்.. அதிமுகவில் சசிகலாவையும் இணைப்போம்!’ - சி.வி.சண்முகம் விருப்பம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in