பழநியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் விற்றவர், வாங்கியோர் உள்பட 4 பேர் கைது

சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை
பழநியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் விற்றவர், வாங்கியோர் உள்பட 4 பேர் கைது
Updated on
1 min read

பழநி: பழநி​யில் ரூ.100 கோடி மதிப்​பிலான 1.40 ஏக்​கர் நிலமோசடி வழக்​கில் நிலம் விற்​றவர், வாங்​கியோர் உள்பட 4 பேரை சிபிசிஐடி போலீ​ஸார் கைது செய்​தனர்.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி அடி​வாரத்​தில் பூங்கா சாலையில் உள்ள தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்குச் சொந்​த​மான 1.40 ஏக்​கர் நிலத்தை ஜூலை 6-ம் தேதி சார்​ப​தி​வாளர் (பொறுப்​பு) ஜஸ்​டின் மணி​கண்​டன் தனி​நபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்து கொடுத்​தார். ரூ.100 கோடி மதிப்​பிலான இந்த நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடி​யாக பதிவு செய்​யப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

சார்​ப​தி​வாளர், நிலத்தை விற்ற திருப்​பு​கழ் சுவாமிகள் - முரு​கதாஸ் சுவாமிகள் - தண்​ட​பாணி சுவாமிகள் அறக்​கட்​டளை​யைச் சேர்ந்த முரு​க​தாஸ், நிலத்தை வாங்​கியோர் உள்​ளிட்​டோர் மீது பழநி அடி​வாரம் போலீஸார் வழக்​குப் பதிந்தனர். இந்த விவ​காரம் தொடர்​பாக சார்​ப​திவாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், மாவட்​டப் பதி​வாளர் சசிகலா சஸ்பெண்ட் செய்​யப்​பட்​டனர்.

பதிவுத்​துறை சார்​பில் அமைக்கப்​பட்ட உயர்​நிலைக் குழுவும் விசா​ரித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்​பித்​தது. நிலத்தை வழங்​கிய பழநி பாலச​முத்​திரத்தைச் சேர்ந்த குப்​பு​சாமி மணி​யக்​காரரின் வாரிசுகள் சுந்​தரி, அவரது மகன் விஷ்ணு சுதர்​சன், மகள் ஜெயலட்​சுமி ஆகியோர் நேற்று முன்​தினம் சிபிசிஐடி அலு​வல​கத்தில் ஆஜராகி, 1880-ல் தர்ம காரி​யத்​துக்​காக எழு​திக் கொடுத்த நிலத்தின் மூலப் பத்​திரத்தை சமர்ப்​பித்​தனர்.

இதனிடையே நிலத்தை விற்றோர், வாங்​கியோரை இது​வரை கைது செய்​யாதது ஏன் என பல தரப்​பிலும் கேள்வி எழுந்​தது.

இந்​நிலை​யில், அறக்​கட்​டளை நிர்​வாகி​ விழுப்​புரத்​தைச் சேர்ந்த முரு​க​தாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்​பேட்டை பாப்​பான்குளத்​தைச் சேர்ந்த வெள்​ளைத்துரை, பத்​திரப்​ப​திவுக்கு உதவி​யாக இருந்த பழநி கவுண்​டன்​குளத்​தைச் சேர்ந்த வழக்​கறிஞர் அன்​வர்​தீன் ஆகிய 3 பேரை​ நேற்று முன்​தின​மும் மற்​றொரு​வரான பழநி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி நேற்​றும் கைது செய்​யப்​பட்​டனர்.

இவர்கள் மீது 5 பிரிவு​களில் வழக்​குப் பதிந்து திண்​டுக்கல் சிபிசிஐடி அலு​வல​கத்​துக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அங்கு எஸ்பி ஷாஜி​தா, டிஎஸ்பி அஜய் தங்​கம் விசா​ரித்தனர். மருத்​துவ பரிசோதனைக்​குப் பின்பு திண்​டுக்​கல் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தப்பட்ட 4 பேரும் மதுரைமத்​திய சிறை​யில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, ஜஸ்​டின் மணி​கண்​டன் நேற்று 3-வது நாளாக வி​சா​ரணைக்கு ஆஜரா​னார். அவருக்கு ஆக.3 வரை நிபந்​தனை​ இடைக்கால முன்​ஜாமீன்​ வழங்​கியுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

பழநியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் விற்றவர், வாங்கியோர் உள்பட 4 பேர் கைது
CWG 2026: பாரா 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் இந்தியாவின் திலீப்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in