அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்னென்ன? - முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை

Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுக்குழு - செயற்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் இன்று ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில், ‘ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைப்படி, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று காலை (நவம்பர் 26), கழக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் வருகின்ற 10.12.2025 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து, கழக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி, கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி. ஜெயராமன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை,

கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், கழக விவசாயப் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் ஆகியோர் கலந்தாலோசித்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை</p></div>
“மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்” - முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in