

சென்னை: செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் திமுகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
இது குறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ”சென்னை, பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உடன் பிறந்த மூத்த சகோதரர் காளியப்பனின் மகனும், திமுக குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் மு.மு. செல்வன், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும், செல்வத்துடன், குள்ளம்பாளையம் கிராமம், கோபிசெட்டிப்பாளையம் தொகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த சூழலில் செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.