தலைமை தகவல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

மேலும் 4 புதிய ஆணையர்களும் அறிவிப்பு
எஸ்.நடராஜன், டி.கே.ஷபீர், பி.மகாலிங்கம்

எஸ்.நடராஜன், டி.கே.ஷபீர், பி.மகாலிங்கம்

Updated on: 
1 min read

சென்னை: மாநில தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஷகீல் அக்தர் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.

அதேபோல் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காலமும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் மாநில தகவல் ஆணையத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 4 புதிய தகவல் ஆணையர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மனிதவளத் துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட அறிவிக்கை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர மாநில தகவல் ஆணையர்களாக எஸ்.மகாலட்சுமி, டி.கே.ஷபீர், சி.பி.மீனா, பத்திரிகையாளர் பி.மகாலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த நியமனங்களை ஆளுநர் ஆர்வி.அர்லேகர் மேற்கொண்டுள்ளார்.

இவர்கள் இந்த பதவியில் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை இருப்பார்கள். இவர்களுக்கான ஊதியம், படிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இவர்களுக்கு விரைவில் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். தகவல் ஆணையராக முதன்முதலாக பத்திரிகையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>எஸ்.நடராஜன்,&nbsp;டி.கே.ஷபீர்,&nbsp;பி.மகாலிங்கம்</p></div>
ரூ.400 கோடி ஊழல் வழக்கில் அன்பில் மகேஸுக்கு 5 நாள் போலீஸ் காவல் அனுமதி கோரிய மனு மீது நவ.2-ல் தீர்ப்பு

X