ஸ்ரீராம ஜென்மபூமி ஊழல் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் முன்னாள் எம்​.பி. வலியுறுத்தல்

ஸ்ரீராம ஜென்மபூமி ஊழல் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் முன்னாள் எம்​.பி. வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ‘ஸ்ரீராம ஜென்​மபூமி ஊழல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்​களுக்​குப் பதிலளிக்க வேண்​டும்’ என, அகில இந்​திய காங்​கிரஸ் கட்சி​யின் ஆராய்ச்​சித் துறைத் தலை​வரும், முன்​னாள் எம்​பியு​மான எம்​.​வி.​ராஜீவ் கவுடா தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து சென்​னை, சத்​தி​யமூர்த்தி பவனில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அரசு நிர்​வாகத்​தில் வெளிப்​படைத் தன்​மை​யைக் கொண்​டுவர தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்தை காங்​கிரஸ் கூட்​டணி அரசு அறி​முகப்​படுத்​தி​யது.

ஆனால், தற்​போதைய பாஜக அரசு, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க் ஷேத்​திர அறக்​கட்​டளையை இந்த ஆர்​டிஐ சட்ட வரம்​புக்​குள் வராத​வாறு பாது​காத்துவைத்​துள்​ளது.

முறை​கேடு​கள் இல்லை என்​றால் ஏன் இந்த பாது​காப்​பு? பெரும் பணமோசடி மற்​றும் நிதி முறை​கேடு​கள் அம்​பல​மான​தால், அறக்​கட்​டளை​யின் மூத்த நிர்​வாகி​களான சம்​பத் ராய் மற்​றும் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்​களது பதவி​களை ராஜி​னாமா செய்​துள்​ளனர்.

இந்த விவ​காரம் குறித்து உத்​தரப்​பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அமைத்​துள்ள சிறப்பு புல​னாய்​வுக் குழு​வின் தலை​வர் மீது ஏற்​கெனவே பல்​வேறு மோசடி புகார்​கள் உள்​ளன. இந்த குழு தற்​போது கீழ்​மட்ட ஊழியர்​களை மட்​டுமே குறி​வைத்து விசா​ரிக்​கிறது.

முக்​கிய நபர்​களைப் பாது​காக்க முயல்​கிறது. இந்த அறக்​கட்​டளை உரு​வாக்​கத்​தி​லும், கோயில் கட்​டு​மானப் பணி​களி​லும் பிரதமரின் அலு​வல​கம் மிக முக்​கியப் பங்​காற்​றி​யுள்​ளது.

பிரதமரின் முன்​னாள் முதன்​மைச் செய​லா​ளர் நிருபேந்​திர மிஸ்ரா இந்த அறக்​கட்​டளை​யில் உள்​ளார். எனவே, இந்த ஊழல் குறித்து பிரதமர் நரேந்​திர மோடி, நாட்டு மக்​களுக்​குப் பதிலளிக்க வேண்​டும்.

முறை​கேடு​களில் தொடர்​புடைய​தாகக் கருதப்​படும் சம்​பத் ராய், அனில் மிஸ்ரா உள்​ளிட்ட அறக்​கட்​டளை​யின் முக்​கிய நிர்​வாகி​கள் மீது உடனடி​யாக எஃப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டு, கைது நடவடிக்கை மேற்​கொள்​ளப்பட வேண்​டும்.

தற்​போதைய எஸ்​சிடி குழு​வின் மீது நம்​பிக்​கை​யில்​லாத​தால், உச்ச நீதி​மன்​றத்​தின் நேரடி மேற்​பார்​வை​யில் ஒரு சுதந்​திர​மான நீதி விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும்.

பக்​தர்​களின் நம்​பிக்​கை​யைச் சிதைத்த தற்​போதைய ஸ்ரீராம ஜென்​மபூமி தீர்த்த க் ஷேத்​திர அறக்​கட்​டளையை உடனடி​யாகக் கலைத்​து​விட்​டு, நேர்​மை​யான நபர்​களைக் கொண்டு புதிய அறக்​கட்​டளையை மறுசீரமைப்பு செய்ய வேண்​டும்.

கோயிலுக்​காக உலகெங்​கிலும் உள்ள பக்​தர்​கள் வழங்​கிய ரூ.3,000 கோடிக்​கும் அதி​க​மான நிதி என்ன ஆனது? என்​பது குறித்து முழு​மை​யான தடய​வியல் தணிக்​கை நடத்​தப்​பட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்.

ஸ்ரீராம ஜென்மபூமி ஊழல் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் முன்னாள் எம்​.பி. வலியுறுத்தல்
குழந்தை திருமணத்தை​ தடுக்கும் சிங்கப்பெண் படை​: இடைநிற்றல் மாணவ-​மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in