அதிமுக முன்னாள் அமைச்சரின் மகள் தவெகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் அமைச்சரின் மகள் தவெகவில் இணைந்தார்
Updated on: 
1 min read

தூத்துக்குடி: தமிழகத்​தில் புதிய அரசு பொறுப்​பேற்​றது முதல் அதிமுக​வில் இருந்து பல முக்​கிய நிர்​வாகி​கள், முன்​னாள் அமைச்​சர்​கள் தொடர்ந்து தவெக​வில் இணைந்து வரு​கின்​றனர். தூத்​துக்​குடி வடக்கு மாவட்ட அதிமுக செய​லா​ள​ரும், முன்​னாள் அமைச்​சரு​மான கடம்​பூர் செ.ராஜூ உள்​ளிட்ட சில நிர்​வாகி​கள் ஏற்​கெனவே தவெக​வில் இணைந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், அதிமுக தூத்​துக்​குடி தெற்கு மாவட்​டச் செய​லா​ள​ரும், முன்​னாள் அமைச்​சரு​மான எஸ்.பி.சண்​முகநாதனின் மகள் பொன்னரசி, தனது கணவர் அசோக்​குடன் தவெக​வில் இணைந்​துள்​ளார். தமிழக மீன்​வளம் மற்​றும் மீனவர் நலத்​துறை அமைச்​சரும், தூத்​துக்​குடி மத்​திய மாவட்ட தவெக செய​லா​ள​ரு​மான ஸ்ரீநாத்தை சென்​னை​யில் சந்​தித்து, அவரது முன்​னிலை​யில் இரு​வரும் தங்​களை தவெக​வில் இணைத்​துக் கொண்​டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சரின் மகள் தவெகவில் இணைந்தார்
புலிகள் காப்பகத்தில் ரீல்ஸ்: அமைச்சர் வன்னியரசு மீது விசாரணை - கர்நாடக வனத்துறை அமைச்சர் உத்தரவு

X