விருதுநகரில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விருதுநகரில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Updated on: 
2 min read

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக சாத்தூரில் 143 மி.மீட்டர் மழை பதிவானது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானத் தொடர்ந்து தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று. அதையடுத்து,

நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவில் வாகனங்களை ஓட்ட முடியதால் மதுரை - தூத்துக்குடி, மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சாலையோரத்தில் கனரக வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.

அதோடு, மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் - விருதுநகர் இடையே நேற்று முன்தினம் இரவு கட்டுப்பாட்டை இழந்த கார்கள் சாலையோர தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளாயினர். விருதுநகர் சத்திரரெட்டியபட்டி அருகே இரு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேன்கள் கொண்டுவரப்பட்டு விபத்தில் சிக்கிய கார்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானாது.

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றிய பகுதி குளம் போல் மழை நீர் தேங்கியது. விருதுநகர் அரசு போக்குவரத்துக்கழக பணி மனையிலும் சுமார் 3 அடி உயரத்திற்கு மழை நீர் குளம்போல் தேங்கியதால் காலை பணிமனையிலிருந்து அரசு பேருந்துகளை வெளியே எடுத்துவருவதில் சிக்கல் ஏற்பட்டது. பணிமனைக்குள் நுழைய முடியாமல் 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் வெளியிலேயே நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் 7 மணி அளவில் மழை நீர் வடியத் தொடங்கியதும் ஒன்றன் பின் ஒன்றாக பேருந்துகள் வெளியே எடுத்துவரப்பட்டன.

மேலும், தூர்வாரப்பட்ட பிறகு கவுசிகா ஆற்றிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய்களில் அடைப்பு மற்றும் கோரைப்புற்கள் காரணமாக போலீஸ் பாலம், அய்யனார் நகர் பாலம் போன்றவை மூழ்கின. அப்பகுதியில் வாகனங்களில் செல்ல முடியமல் பொதுமக்கள் தவித்தனர். என்ஜிஓ காலனி, தபால் தந்தி நகர், சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளையும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளை விட்டு வெளிய வர முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதேபோன்று, சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதிகளிலும் கனமழை பெய்தது.

மழைப் பொழிவு: காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூரில் 143 மி.மீட்டரும் மழை பதிவானது. திருச்சுழியில் 4.மி.மீ, ராஜபாளையத்தில் 23 மி.மீ, காரியாபட்டியில் 25 மி.மீ, ஸ்ரீவில்லிபுத்தூரில் 3.மி.மீ, விருதுநகரில் 95 மி.மீ, சிவகாசியில் 43 மி.மீ, பிளவக்கல் அணையில் 36 மி.மீ, வத்திராயிருப்பில் 30 மி.மீ, அருப்புக்கோட்டையில் 10 மி.மீ, வெம்பக்கோட்டையில் 23 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

விருதுநகரில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பேட்மிண்டன் வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in