மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலை தடுப்பு மீது கார் மோதி 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாப உயிரிழப்பு

சாலையின் மையத்திலுள்ள தடுப்புச்சுவரில் மோதி உருக்குலைந்த  கார்.

சாலையின் மையத்திலுள்ள தடுப்புச்சுவரில் மோதி உருக்குலைந்த கார்.

Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்​டம் கொட்​டாம்​பட்டி அருகே சாலை​யின் தடுப்​புச் சுவரில் கார் மோதி​ய​தில் கோயிலுக்​குச் சென்று திரும்​பிய ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்​தவர் பிர​காஷ் (76). இவரது உறவினர்​கள் சென்னை சூளைமேட்​டைச் சேர்ந்த வெங்​கடேஷ் ( 60), இவரது தாய் வசந்தா (90), மனைவி ஆஷா ( 58), மாமி​யார் சுலோச்​சனா ( 72) ஆகியோர் திருச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயிலுக்கு நேற்று அதி​காலை மதுரை​யில் இருந்து ஒரே காரில் புறப்​பட்​டுச் சென்​றனர்.

காரை வெங்​கடேஷ் ஓட்​டி​னார். சுவாமி தரிசனம் முடித்து விட்டு மதுரைக்குப் புறப்​பட்​டனர். நேற்று மாலை 5 மணிக்கு மதுரை மாவட்​டம் கொட்​டாம்​பட்டி அருகே அணுகு​சாலை- நான்கு வழிச்​சாலை சந்​திப்​பில் வந்​த​போது திடீரென கட்​டுப்​பாட்டை இழந்த கார் சாலை​யின் நடுவே உள்ள தடுப்​புச்​சுவரில் மோதி​யது.

இதில் காரின் முன்​பகுதி நொறுங்​கியது. இந்த விபத்​தில் காரில் பயணித்த பிர​காஷ், வெங்​கடேஷ் உள்​ளிட்ட 5 பேரும் அவர்​களது இருக்​கை​யில் அமர்ந்​த​படி அந்த இடத்​திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

தகவல் அறிந்த கொட்​டாம்​பட்டி போலீ​ஸார் சம்பவ இடத்​துக்​குச் சென்று காருக்​குள் சிக்​கிய உடல்​களை மீட்டு மேலூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பினர்.

மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அரவிந்த் விபத்து நடந்த இடத்​துக்​குச் சென்று ஆய்வு செய்​தார். ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் விபத்​தில் உயி​ரிழந்த சம்​பவம் மதுரை​யில் சோகத்தை ஏற்​படுத்​தி​யது.

<div class="paragraphs"><p>சாலையின் மையத்திலுள்ள தடுப்புச்சுவரில் மோதி உருக்குலைந்த  கார். </p></div>
2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு: சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in