சென்னையில் சிங்கப்பெண் அதிரடிப் படையின் முதல் வழக்கு: வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது

சென்னையில் சிங்கப்பெண் அதிரடிப் படையின் முதல் வழக்கு: வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது
Updated on
1 min read

சென்னை: வீடு புகுந்து பெண்​ணிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்ட நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்​படை போலீ​ஸார் பிடித்​து, மகளிர் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர். இதன்​மூலம், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை சென்​னை​யில் தனது முதல் கணக்கை தொடங்​கி​யுள்​ளது.

பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில் அமைக்​கப்​பட்ட சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படையை முதல்​வர் விஜய் கடந்த 9-ம் தேதி தொடங்கி வைத்​தார்.

பெண்​கள், குழந்​தைகளின் பாது​காப்பை உறுதி செய்​ய​வும், அவர்​களுக்கு எதி​ரான குற்​றங்​களைத் தடுக்​க​வும், பொது இடங்​களில் பாது​காப்பை அதி​கரிக்​க​வும் இந்த படையைச் சேர்ந்த 70 குழுக்​கள் தமிழகம் முழு​வதும் முதல் கட்​ட​மாக அனுப்​பப்​பட்​டுள்​ளன.

அவர்​கள் நேற்று 2-வது நாளாக பணி​யில் ஈடு​பட்​டனர். சென்​னை​யில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படையைச் சேர்ந்த 12 குழுக்​கள் கண்​காணிப்​புப் பணி​களில் ஈடு​பட்​டுள்​ளன.

இவர்​கள் பள்​ளி, கல்​லூரி, பேருந்து நிலை​யம் மற்​றும் மக்​கள் அதி​கள​வில் கூடும் இடங்​களில் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் நடை​பெறு கிறதா என தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்.

அதோடு மட்​டுமல்​லாமல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான போலீ​ஸாருடன் ஒருங்​கிணைந்​தும் பணி​யாற்​றுகின்​றனர்.

இந்​நிலை​யில் சென்னை அயனாவரம் பகு​தி​யில் 37 வயதுடைய பெண் ஒரு​வர் நேற்று முன்​தினம் மதி​யம் 1 மணி​யள​வில் வீட்​டில் தனி​யாக இருந்​துள்​ளார்.

கணவர், மகள்​கள் வெளியே சென்​றிருந்​தனர். அந்த நேரத்​தில் அதே பகு​தி​யைச் சேர்ந்த சுரேஷ் (36) என்ற நபர் மது​போதை​யில் அப்​பெண்​ணின் வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைந்து பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​டுள்​ளார். உடனே அப்​பெண் அதிர்ச்​சி​யில் கூச்​சலிட்​டுள்​ளார்.

இதைக் கேட்டு அக்​கம்​பக்​கத்​தினர் திரண்​டனர். இதையறிந்த அந்த நபர் பெண்ணை கட்​டிலில் தள்​ளி​விட்டு தப்பி ஓடி​னார். இதுகுறித்து அப்​பகுதி மக்​கள் காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் கொடுத்​தனர்.

உடனே சிங்​கப்​பெண் சிறப்பு படையைச் சேர்ந்த எஸ்ஐ ராஜேஸ்​வரி, பெண் காவலர்​கள் சங்​கீ​தா, தீபிகா ஆகியோர் விரைந்து சென்று தப்​பியோடிய

சுரேஷை தேடிக் கண்டு பிடித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர்.

சுரேஷை போலீ​ஸார் கைது செய்​தனர். பின்​னர் அவரை நீதி​மன்ற உத்​தர​வுப்​படி சிறை​யில் அடைத்​தனர். சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை ஆரம்​பிக்​கப்​பட்ட பின், அவர்​கள் மூலம் பதி​யப்​பட்ட முதல்​ வழக்​கு இது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

சென்னையில் சிங்கப்பெண் அதிரடிப் படையின் முதல் வழக்கு: வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது
தமிழக மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in