உர தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு: மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி

உர தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு: மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி
Updated on
1 min read

சென்னை: அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போரால் உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தென்னை பங்குதாரர்களுக்கான மாநாடு சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அரசின் தென்னை மேம்பாட்டுத்திட்டம் குறித்து விவசாயி களுடன் கலந்துரையாடினார். மேலும், விவசாயிகள் தங்கள் கருத்துகளை coconutbudget@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் எனவும் அமைச்சர் சவுகான் அறிவுறுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தென்னிந்தியாவில் தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஒரு கோடி பேர் உள்ளனர். அவர்கள் சமீப ஆண்டுகளாக சில பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். வெள்ளை பூச்சி போன்ற பூச்சிகள் தேங்காய் உற்பத்தியைக் குறைக்கின்றன. அவற்றை களைவதற்காக நடப்பு பட்ஜெட்டில் தேங்காய் உற்பத்திக்கான தனித்திட்டம் அறிவிக்கப்பட்டது.

அத்திட்டம் குறித்து விவசாயிகளிடம் தற்போது ஆலோசனைநடத்தப்பட்டுள்ளது. இதில்கேரளம், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, அசாம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் விவசாயிகளுடன் கலந்துரையா டினோம். அதிக பலன் கொடுக்கக் கூடிய நோய் எதிர்ப்புகொண்ட புதிய ரகம், தேங்காய் வியாபாரத்தை கூட்டுறவு துறை மூலம் எப்படி மேற்கொள்வது, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தென்னை கன்றுகளை உருவாக்குவது குறித்து ஆலோசித்தோம்.

குடும்ப அட்டைகளுக்கு தரக்கூடிய பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுத்தால் தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுதொடர்பாக மத்திய அரசு, அனைத்து மாநில அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

புயல் போன்ற பேரிடர் நேரங்களில் தென்னை மரத்துக்கு இழப்பீடு பெறுவது குறித்து மாநில அரசுடன் ஆலோசித்து தென்னை உற்பத்தி, மதிப்பு கூட்டல் உள்ளிட்டவை செயல்படுத்த இருக்கிறோம். அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போரால் உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. விரைவில் அதற்கு தீர்வு காண்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உர தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு: மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி
நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும்: விஜய் மனைவி சங்கீதா கூடுதல் மனு தாக்கல் - முழு விவரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in