கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு விவசாயிகள் சங்கத்தினர் யாத்திரை

மார்ச் 19-ல் டெல்லியில் லட்சக்கணக்கானோர் பேரணி
கன்னியாகுமரியில் நேற்று யாத்திரையைத் தொடங்கிய, ஐக்கிய விவசாயிகள் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் தல்லேவால் தலைமையிலான விவசாயிகள்.

கன்னியாகுமரியில் நேற்று யாத்திரையைத் தொடங்கிய, ஐக்கிய விவசாயிகள் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் தல்லேவால் தலைமையிலான விவசாயிகள்.

Updated on
1 min read

நாகர்கோவில்: அரசி​யல் சார்​பற்ற ஐக்​கிய விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில், கன்​னி​யாகுமரி முதல் காஷ்மீர் வரையி​லான விவ​சா​யிகள் யாத்​திரை நேற்று தொடங்​கியது.

எம்​.எஸ்​.​சாமி​நாதன் குழு பரிந்​துரையை நிறைவேற்ற வேண்​டும். விவ​சா​யிகள் கடன்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, 7 வாக​னங்​களில் 30 பேர் கொண்ட குழு​வினர் காஷ்மீர் வரை யாத்​திரை செல்​கின்​றனர்.

குமரி காந்தி மண்​டபம் முன்புநேற்று தொடங்​கிய யாத்​திரை, நெல்லை மதுரை, சென்னை வழி​யாக பல்​வேறு மாநிலங்​களைக் கடந்​து, வரும் மார்ச் 15-ம் தேதி காஷ்மீரை அடைகிறது. மார்ச் 19-ம் தேதி டெல்லி ராம்​லீலா மைதானத்​தில் லட்​சக்​கணக்​கான விவ​சா​யிகள் பங்​கேற்​கும் பேரணி நடை​பெறுகிறது.

குமரி​யில் நடந்த தொடக்க நிகழ்ச்​சி​யில் சங்​கத்​தின் தமிழக ஒருங்​கிணைப்​பாளர் பி.ஆர்​.​பாண்​டியன், தலை​வர் அய்​யாக்​கண்​ணு, குமரி மாவட்ட பாசனத்துறை தலை​வர் வின்ஸ் ஆன்றோ உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். பின்​னர் பி.ஆர்​.​பாண்​டியன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விவ​சா​யிகளின் கடனை தள்ளு​படி செய்ய மத்​திய அரசு மறுக்​கிறது. ஆனால், கார்ப்​பரேட் நிறு​வனங்​களுக்கு ரூ.14.5 லட்​சம் கோடியை தள்​ளு​படி செய்​திருக்​கிறது. விவ​சா​யிகள் தற்​கொலைதொடர்​கிறது. விளை பொருட்​களுக்கு லாபகர​மான விலை கிடைக்​க​வில்​லை.

2014 தேர்​தலின்​போது பாஜக​வின் அறிக்​கை​யில், எம்​.எஸ்​.​சாமி​நாதன் குழு பரிந்​துரையை நிறைவேற்​று​வ​தாக​வும், விவ​சாயக் கடன்​களை தள்​ளு​படி செய்​வ​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், இது​வரை அதை நிறைவேற்​ற​வில்​லை. ஐக்​கிய விவ​சா​யிகள் சங்​கத்​தின் தேசிய ஒருங்​கிணைப்​பாளர் ஜக்​ஜித் சிங் தல்​லே​வால் தலை​மை​யில் யாத்​திரை தொடங்​கப்​பட்​டுள்​ளது. அனைத்து மாநிலங்​களின் ஒப்​புதலோடு, மத்​திய அரசு விவ​சா​யிகளின் கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டும். யாத்​திரை​யில் அனைத்து மாநிலப் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​றுள்​ளனர்.

அந்​தந்த மாநிலங்​களில் விவ​சா​யிகள் மகாசபைக் கூட்​டம் நடை​பெற இருக்​கிறது. இன்று மதுரை​யிலும், நாளை நாகை​யிலும், வரும் 10-ம் தேதி காலை​யில் சேலத்​தி​லும் மகாசபைக் கூட்டங்​கள் நடை​பெற இருக்​கின்​றன. அடுத்து கர்​நாடகா​வுக்​குள் பேரணி பயணிக்​கிறது. தமிழக முதல்​வரை சந்​திப்​ப​தற்கு அனு​மதி கோரி இருக்​கிறோம். அவர் அனு​மதி தந்​தால் வரும் 9-ம் தேதி சந்​திப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>கன்னியாகுமரியில் நேற்று யாத்திரையைத் தொடங்கிய, ஐக்கிய விவசாயிகள் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் தல்லேவால் தலைமையிலான விவசாயிகள்.</p></div>
“மிகப் பெரிய தோல்வியை பாஜகவும், அதிமுகவும் அடையப் போகிறது” - முதல்வர் ஸ்டாலின் சூளுரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in