கும்மிடிப்பூண்டி அருகே போலி மருத்துவர் கைது: மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்

கைதான முகமது ரபீக்

கைதான முகமது ரபீக்

Updated on
1 min read

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்​பாக்​கத்​தில் போலி மருத்​து​வரை நேற்று முன் தினம் போலீ​ஸார் கைது செய்​தனர். போலி மருத்​து​வர் நடத்​திய மருத்​து​வ​மனைக்கு அதி​காரி​கள், ‘சீல்’ வைத்​தனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள ஆரம்​பாக்​கம், ஜிந்தா தெரு​வில், ’நேச்​சுரல் ஹெல்த் கேர் சென்​டர்’ என்ற பெயரில் மருத்​து​வ​மனை ஒன்று செயல்​பட்டு வந்​தது. இந்த மருத்​து​வ​மனை​யில் மருத்​து​வம் படிக்​காத நபர் சிகிச்சை அளித்து வந்​த​தாக, பொது​மக்​கள் தரப்​பில் மருத்​து​வத்துறை அதி​காரி​களுக்கு புகார்​கள் சென்​றன.

அதனடிப்​படை​யில், திரு​வள்​ளூர் மாவட்ட மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் துறை அதி​காரி​கள் நேற்று முன் தினம், சம்​பந்​தப்​பட்ட மருத்​து​வ​மனை​யில் திடீர் ஆய்வு மேற்​கொண்​டனர்.

அந்த ஆய்​வில், சென்னை, கொடுங்​கையூரைச் சேர்ந்த முகமது ரபீக்​(35) என்​பவர், எலெக்ட்ரோ ஹோமியோபதி மட்​டுமே படித்​து​விட்​டு, நோயாளி​களுக்கு ஆங்​கில மருத்​துவ முறை​யில் சிகிச்சை அளித்து வந்​தது தெரிய வந்​தது.

இதையடுத்​து, மாவட்ட மருத்​து​வம், ஊரக நலப்​பணி​கள் துறை அதி​காரி​கள், முகமது ரபீக் நடத்தி வந்த மருத்​து​வ​மனையை பூட்டி ‘சீல்’ வைத்​தனர். தொடர்ந்​து, முகமது ரபீக் ஆரம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டார்.

இதுகுறித்​து, கும்​மிடிப்​பூண்டி அரசு மருத்​து​வ​மனை முதன்மை மருத்​து​வர் சுஜி கிருத்​திகா அளித்த புகாரின் பேரில், போலி மருத்​து​வ​ரான முகமது ரபீக்​கை போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.

<div class="paragraphs"><p>கைதான முகமது ரபீக்</p></div>
திருவள்ளூர் அருகே தெரு நாய்கள் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 9 பேர் காயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in