

ஸ்ரீவில்லிபுத்தூர்: சமூக வலைதளத்தில் முதல்வர் மற்றும் தவெக எம்எல்ஏ குறித்து அவதூறாகக் கருத்துத் தெரிவித்ததாக நூற்பாலைத் தொழிலாளியை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தவெக பிரமுகர் கணேஷ்குமாரின் சமூக வலைதள பதிவுக்கு கருத்துத் தெரிவித்த தாழையூத்து பட்டியைச் சேர்ந்த நூற்பாலைத் தொழிலாளி சஞ்சய்ராமசாமி, முதல்வர் குறித்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ குறித்தும் அவதூறாக பதிவிட்டதாக தெரிகிறது. புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் சஞ்சய் ராமசாமியை கைது செய்தனர்.