ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் சொத்து ஆவணங்களை தபாலில் அனுப்பும் வசதி

பத்திரப்பதிவுத் துறை அரசாணையில் தகவல்
ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் சொத்து ஆவணங்களை தபாலில் அனுப்பும் வசதி
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் ஆன்​லைன் மூலம் சொத்​துப் பதிவு செய்​யும் பொது​ மக்​களுக்கு, அதன் ஆவணங்​களின் அச்​சுப் பிரதி​களை நேரடி​யாக வீடுகளுக்கே தபாலில் அனுப்​பும் வகை​யில் புதிய வசதி ஏற்​படுத்​தப்​பட உள்​ளது.

இது​குறித்து பதிவுத் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளி​யிட்ட அரசாணை:

வருகை இல்லா ஆவணப்​ப​திவு திட்​டம் கடந்த ஆக.17-ம் தேதி முதல் அமலில் உள்​ளது. இதன்​மூலம் அங்​கீகரிக்​கப்​பட்ட மனைப் பிரிவு​கள், அடுக்​குமாடி குடி​யிருப்​புகளில் முதல்​முறை​யாக சொத்து வாங்​குபவர்​கள் சார்​ப​திவாளர் அலு​வல​கத்​துக்​குச் செல்​லாமலேயே பதிவு செய்​ய​லாம்.

அடை​யாளச் சரிபார்ப்பு, ரேகைப் பதிவு உள்​ளிட்டவை டிஜிட்​டல் முறை​யில் நடை​பெறும். பதிவு செய்த ஆவணங்​கள் மின்​னணு முறை​யில் அனுப்​பப்​பட்​டாலும், அச்​சுப் பிரதி​யையும் வழங்க புதிய ஏற்​பாடு செய்​யப்​படு​கிறது. அதன்​படி, பாது​காப்பு அம்​சங்​கள் கொண்ட சிறப்​புத்​தாள்​கள் பயன்​படுத்தி, க்யூஆர் குறியீடு வசதி​யுடன் பதிவு செய்​யப்​பட்ட ஆவணங்​கள் ஒரே இடத்​தில் அச்​சிடப்​படும். இந்த அச்​சகத்தை அமைத்து 5 ஆண்​டுகள் நடத்​து​வதற்கு தனியார் நிறு​வனத்​திடம் ஒப்​பந்​தம் வழங்​கப்​படும்.

இந்த அச்​சகத்​துக்​கான இடத்​தைப் பதிவுத்​துறை வாடகை​யின்றி வழங்​கும். அச்​சகத்தை நடத்​தும் நிறு​வனத்​துக்​கும், அங்கு பணிபுரிபவர்​களுக்​கும் பின்​னணி சரிபார்ப்பு கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளன.

அச்​சிடப்​பட்ட ஆவணங்​கள் இந்​திய அஞ்​சல் துறை மூலம் சொத்து வாங்​கிய​வர்​களின் பதிவு செய்​யப்​பட்ட முகவரிக்கு விரைவு அஞ்​சலில் அனுப்​பப்​படும். சென்னை மற்​றும் அரு​கிலுள்ள மாவட்​டங்​களில் 48 மணி நேரத்​துக்​குள் ஆவணங்​களைச் சேர்க்க இலக்கு நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது. தொலை​தூர மாவட்​டங்​களுக்கு அதற்​கேற்ப கால அளவு நிர்​ணயிக்​கப்​படும்.

பாது​காப்​புத்​தாள் தமிழ்​நாடு செய்​தித்​தாள் மற்​றும் காகித நிறு​வனத்​திடம் இருந்து கொள்​முதல் செய்​யப்​படும். அச்​சிடுதல் மற்​றும் அஞ்​சல் செல​வு​கள் பதிவுக் கட்​ட​ணத்​தில் ஈடுசெய்​யப்​படும். ஒப்​பந்த நிறு​வனத்​துக்கு வழங்​கப்​படும் ஆவணம் ஒன்​றுக்​கான கட்​ட​ணத்தை பதிவுத்​துறை ஏற்​கும்.

ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் சொத்து ஆவணங்களை தபாலில் அனுப்பும் வசதி
சோனியா காந்தி சுயசரிதை புத்தகம் வெளியீடு: தமிழக முதல்வர் விஜய் உட்பட 7 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

X