“பொங்கல் பண்டிகைக்காக டாஸ்மாக் கடைகளில் காலாவதி மதுபானங்களா?” - அண்ணாமலை சாடல்

அண்ணாமலை

அண்ணாமலை

Updated on
1 min read

சென்னை: “கோயம்புத்தூரில் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக வெளியாகும் செய்தி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கோயம்புத்தூரில் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பொதுமக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கம் கொண்ட திமுக அரசின் இந்தச் செயல்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மது விற்பனை மூலமாக பல ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் ஈட்டும் திமுக அரசு, குறைந்தபட்சம், விற்பனை செய்யும் மதுவின் தரத்தைக் கூடப் பாதுகாக்கத் தவறுவது, திட்டமிட்ட குற்றம்.

காலாவதியான மதுவை விற்பதால் பாதிக்கப்படுவது முதல்வர் ஸ்டாலின் குடும்பமோ அல்லது திமுக அமைச்சர்கள் குடும்பமோ அல்ல, அப்பாவி பொதுமக்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே. பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதலமைச்சருக்கு அருவருப்பாக இல்லையா?’ எனத் தெரிவித்துள்ளார்

<div class="paragraphs"><p>அண்ணாமலை</p></div>
“போராடும் ஆசிரியர்களை அடக்கி ஒடுக்குவதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா?” - சீமான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in